- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சம்பவத்தை பார்த்து நான் நடுங்கிப் போய்விட்டேன் - குபேரா பட விழாவில் பேசிய நடிகை...

அந்த சம்பவத்தை பார்த்து நான் நடுங்கிப் போய்விட்டேன் – குபேரா பட விழாவில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா!

- Advertisement -

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்த கீதாகோவிந்தம் புஷ்பா புஷ்பா 2 அனிமல் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை வரவேற்பை சினிமா ரசிகர்களிடம் பெற்றுத் தந்திருக்கின்றன. தமிழில் வாரிசு சுல்தான் படங்களிலும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.

ஆனால் தமிழில் அவர் நடித்த 2 படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் தமிழில் அவருக்கு இல்லை. அதே நேரத்தில் இந்தியில் அனிமல் படத்தில் ராஷ்மிகா நடித்தார். அதில் முத்தக்காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் அவர் மிக தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் 2 தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் நாகர்ஜூனா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சைக்காரனாக உள்ள படத்தின் நாயகன், ஒரு கட்டத்தில் குபேரனாக அதாவது மிகப்பெரிய பணக்காரனாக மாறுவதுதான் குபேரா படத்தின் கதை. இதில் முதன்முறையாக தனுஷ், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றியை தந்தால் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஏற்கனவே விஜயுடன் வாரிசு கார்த்தியுடன் சுல்தான் படங்களில் ராஷ்மிகா நடித்திருந்தார். ஆனால் அந்த 2 படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால் ராசியில்லாத நடிகை என்ற ஒரு தகவல் பரவியது. குபேரா படம் அந்த அவப்பெயரை முறியடித்து தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன் என்று ஏற்கனவே ராஷ்மிகா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குபேரா படத்தின் ப்ரி ரீலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியதாவது, குஜராத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்தை பார்த்து நான் நடுங்கி போய்விட்டேன். இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பது புரிந்தது. நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன, எதுவரை வாழ்க்கை செல்லும் என்பது தெரியவில்லை. எனவே கவனமாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களிடம் கருணையோடு இருங்கள் என்று அவ்விழாவில் ராஷ்மிகா உருக்கமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்