- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு - ஆபாச படங்களில் நடித்ததாக எழுந்த குற்றச்சாட்டு!

பிரபல நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு – ஆபாச படங்களில் நடித்ததாக எழுந்த குற்றச்சாட்டு!

- Advertisement -

கடந்த 30 40 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் காலை 11 மணி காட்சி என மலையாள படங்கள் திரையிடுவது வழக்கமாக இருந்தது. பகல் மற்றும் இரவு நேர காட்சிகளில் தமிழ் படங்களும் காலை 11 மணிக்கு மணிக்கு மட்டும் மலையாள கவர்ச்சி நடிகைகள் நடித்த படங்களை தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் திரையிடுவதும் வழக்கமாக இருந்தது.

இதற்கென பிரத்யேகமாக ஆபாசம் மற்றும் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட படங்கள் அதிகளவில் வெளியாகின. கடந்த 1990களில் நடிகை ஷகிலா நடித்த மலையாள ஆபாச படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. மம்முட்டி மோகன்லால் படங்களை விட ஷகிலா நடித்த படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் திரண்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் ஸ்வேதா மேனன். ரதி நிர்வேதம் சால்ட் அண்டு பெப்பர் உள்ளிட்ட பல படங்களில் ஸ்வேதா மேனன் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவான அடுத்த படம் கரம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இவர் பெரும்பாலும் கவர்ச்சியான கேரக்டர்களில் நடிப்பவர். தமிழில் அரவாண் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஸ்வேதா மேனன் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆபாச திரைப்படங்கள் மற்றும் ஆபாச விளம்பரங்களில் நடித்ததாக கூறி என்னாகுளம் போலீசார் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மார்ட்டின் மெனச்சேரி என்ற சமூக ஆர்வலர் கொடுத்த புகாரை அடுத்து எர்ணாகுளம் சிஜேஎம் நீதிமன்றம் உள்ளூர் போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.

- Advertisement -

இதையடுத்து நடிகை ஸ்வேதா மேனன் மீது ஆபாசத்தை தடுக்கும் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் ஸ்வேதா மேனன் தனது படங்களில் முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் தாராளமான கவர்ச்சி காட்டி நடிப்பது வழக்கம். இப்போது அதுதான் அவர் மீது வழக்கு தொடர காரணமாகி விட்டது.

இதற்கிடையே மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா சங்கத்தின் நிர்வாகக்குழு தேர்தல் வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அம்மா சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் ஸ்வேதா மேனன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது மலையாள சினிமா வட்டாரத்தில் அதிக கவனத்தை பெற்று இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்