- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவங்க நம்மள மாதிரி நார்மல் மனுசங்க கிடையாது... நயன்தாராவுக்கு ஓவர் பில்டப் கொடுத்த நபர்... இந்த...

அவங்க நம்மள மாதிரி நார்மல் மனுசங்க கிடையாது… நயன்தாராவுக்கு ஓவர் பில்டப் கொடுத்த நபர்… இந்த அலப்பறைக்கு எல்லாம் ஒரு அளவே இல்லையா…

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. மூத்த நடிகர்களுடன் கதாநாயகியாக நடிப்பது மட்டுமின்றி, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் மண்ணாங்கட்டி என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

 

- Advertisement -

இதில் அவருடன் இணைந்து யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். நகைச்சுவை திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. இது போக டெஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. இதில் மாதவன் மற்றும் சித்தார்த் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

இப்படி நடிப்பு ஒரு பக்கம் இருக்க தனது தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. சான்டரி நாப்கின், அழகு சாதன பொருட்கள் என அவர் மேற்கொள்ளும் தொழிலை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். அது போக பல்வேறு நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப்பாகவும் நயன்தாரா செயல்பட்டு வருகிறார்.

 

அது மட்டுமில்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும், விழாக்காலம் வந்தாலும் நயன்தாராவின் புகைப்படமும் இணையத்தில் வந்துவிடும். தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலக்குடன் அவர் விழாவை கொண்டாடியது தொடர்பான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவார். பொங்கல் திருவிழாவுக்கும் இந்த படம் மிஸ் ஆகவில்லை.

 

இது ஒரு பக்கம் இருக்க தனது சானிட்டரி நாப்கின் நிறுவனமான femi9 நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். ஆனால், இதில் சொன்ன நேரத்தில் பங்கேற்காமல் மிகவும் தாமதமாக அவர் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு லேசான கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் மிகவும் பரபரப்புடன் பேசினார்.

 

அதில் தயவு செய்து அமைதியாக இருங்கள். அவர்கள் நம்மை போல் நார்மல் பீப்பிள் அல்ல என்று தெரிவித்தார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து இருக்கிறது. இதற்கு கமெண்ட் செய்யும் பலரும் அப்போது நயன்தாரா மனித பிறவி இல்லையா? என்று கலாய்த்து வருகின்றனர். அதே சமயம், யாரோ ஒருவர் கூறியதற்கு ஹீரோயின் மேல் எதற்கு நெகட்டிவிட்டியை பரப்ப வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்