- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படம் ஷூட்டிங் நடந்தப்போ எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லே… நிறைய மோதல்தான் இருந்தது -...

அந்த படம் ஷூட்டிங் நடந்தப்போ எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லே… நிறைய மோதல்தான் இருந்தது – நடிகை தேவயானி குறித்து பேசிய இயக்குனர் ராஜகுமாரன்!

- Advertisement -

இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ராஜகுமாரன். பிறகு நீ வருவாய் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் பார்த்திபன் தேவயானி மற்றும் அஜீத்குமார் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அடுத்து அவர் இயக்கிய படம் விண்ணுக்கும் மண்ணுக்கும் இந்த படம் சரியாக போகவில்லை.

இதில் சரத்குமார் குஷ்பு விக்ரம் தேவயானி உள்ளிட்டோர் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸான 10 நாட்களில் நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரன் இருவரும் காதல் திருமணம் நடந்தது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் பல சுவாரசியமான தகவல்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, விண்ணுக்கும் மண்ணுக்கும் படப்பிடிப்பு நடந்த போது எனக்கும் தேவயானிக்கும் காதல் எல்லாம் இல்லை. தினசரி பெரிய மோதல்கள்தான் நடக்கும். நிறைய சண்டைகள்தான் நடக்கும். ஏன்னா அப்ப அவங்க நிறைய படங்களில் பிஸியா நடிச்சிட்டு இருந்தாங்க. எனக்கு சரத்குமார் சார் கால்ஷீட் சரியாக இல்லாமல், குழப்பமான சூழலில் ஷூட்டிங் எடுத்துட்டு இருந்தேன்.

ஒருநாள் நைட் 2 மணி வரைக்கும் சூட்டிங் நடத்தியே ஆகணும். ஏவிஎம்ல செட் பிரிக்கறாங்க. வேற வழியில்லே. நானும் தேவயானிகிட்ட 6 மணிக்கு மேல ஷூட்டிங் போலாமான்னு கேட்டுட்டேன். அவங்க ஓகேவும் சொல்லிட்டாங்க. அப்புறம் 9 மணிக்கு போறேன்னு சொன்னாங்க. நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் 2 மணி வரைக்கும் ஷூட்டிங் போச்சு.

- Advertisement -

அப்புறம் சந்தியா நகருக்கு என் வீட்டுக்கு போற வழியில் அவங்க கார் முன்னாடி போச்சு. அவங்க தி நகர்தானே, இந்த ரோட்டுல எதுக்கு போறாங்கன்னு யோசிச்சேன். அடுத்த நாள் காலை 7 மணிக்கு ஷூட்டிங் வந்தப்போ அதை பத்தி தேவயானி கிட்ட கேட்டேன். அப்போதான் பிரசாந்த் நடிக்கிற அப்பு படத்தோட கடைசி நாள் ஷூட்டிங். நைட் 2 மணிக்கு மேல போய் அங்க 5 மணி வரைக்கும் நடிச்சிட்டு அப்புறம் வீட்டுக்கு போய் குளிச்சு ரெடியாகி இங்க ஷூட்டிங் வந்திருக்காங்கன்னு எனக்கு தெரிஞ்சுது.

அப்படி கடினமாக வேலை பார்த்து நடிச்சவங்க தான் தேவயானி. அப்படி தான் என் படத்துல ஒர்க் பண்ணினாங்க. அப்போ எங்களுக்குள்ள லவ் எல்லாம் இல்லே. ஒரு கட்டத்துக்கு அப்புறம் இரவு நேரங்களில் இரண்டு பேரும் போன் பேச ஆரம்பிச்சோம். அப்போ ஏற்பட்ட பழக்கம்தான் காதலாக மாறியது. விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் ரிலீஸான 9 நாட்களில் நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்