- Advertisement -
Homeபொழுதுபோக்குமூக்குத்தி அம்மன் பட பூஜை; துவக்கமே பெரிய சம்பவமா இருக்கே? நயன்தாரா பற்றிய முக்கிய தகவலை...

மூக்குத்தி அம்மன் பட பூஜை; துவக்கமே பெரிய சம்பவமா இருக்கே? நயன்தாரா பற்றிய முக்கிய தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர்!

- Advertisement -

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. சுந்தர் சி இயக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். படத்துக்கு ஹிப் ஆப் ஆதி இசையமைக்கிறார்.

மேலும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ரெஜினா கசாண்ட்ரா அபிநயா இனியா யோகிபாபு கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோரும் முக்கிய கேரகர்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பட பூஜை மற்றும் துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் விமரிசையாக நடந்தது.

- Advertisement -

இந்த விழாவில் இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட படத்தில் நடிக்கும் நயன்தாரா மற்றும் நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக குஷ்பு மீனா மற்றும் நடிகர் ரவி மோகன் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர். படத்தின் பிரமோ ஷூட்டிங் நேற்றே துவங்கி விட்டது.

மூக்குத்தி அம்மன் படம் ஏற்கனவே நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் 2021ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் தயாரித்தது. மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகே இந்த படம் 2ம் பாகமாக மீண்டும் உருவாகிறது.

- Advertisement -

நேற்று நடந்த பட பூஜை விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கும் நயன்தாரா மற்றும் அவரது குழந்தைகள் என குடும்பமே கடந்த ஒரு மாதமாக விரதம் இருந்து வருகின்றனர், என்று பேசினார். இது பக்தி படமாகவும், அம்மன் வேடத்தில் நடிப்பதாலும் நயன்தாரா இப்படி விரதம் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று நடந்த இந்த பட பூஜை மற்றும் துவக்க விழா, பிரமோ ஷூட்டிங் ஆகியவற்றுக்காக மட்டுமே ரூ. 1 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த படம் ரூ. 100 கோடி பட்ஜெட் என்றாலும், ஆரம்பத்திலேயே ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து படம் குறித்த பிரமோ விஷயங்களில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிக ஆர்வம் காட்டியிருப்பது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்