- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் மீது இன்னும் கோபம் தீரலையா? வேண்டுமென்றே கூலி படம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்...

விஜய் மீது இன்னும் கோபம் தீரலையா? வேண்டுமென்றே கூலி படம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் அப்படி பேசினாரா? – தளபதி ரசிகர்கள் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நீண்ட காலமாக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்துக்கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். 74 வயதிலும் இப்போதும் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த 1975ம் ஆண்டில் அறிமுகமான அவர் இப்போது 50வது ஆண்டு பொன்விழா ஆண்டில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் நடித்த வாரிசு பட விழாவில் மேடையில் பேசிய சிலர், வசூலில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்தான். அவர்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியது பெரிய அளவில் சர்ச்சையானது. ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் விஜய் அல்ல என்று எதிர் விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரத்தில் ரஜினி- விஜய் ரசிகர்கள் இணையத்தில் சமூக வலைதளங்களில் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டது பெரிய சர்ச்சையானது.

- Advertisement -

இதற்கு பின் நடிகர் ரஜினிகாந்த், லால் சலாம் பட விழாவில் பேசும்போது விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன், நான் அவரை பார்த்து பொறாமைப்பட்டால் அது எனக்குதான் அசிங்கம் என்று வெளிப்படையாக பேசினார். அதே போல் லியோ பட விழாவில் பேசிய நடிகர் விஜயும், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று அந்த விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அப்போது மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நடிகர் நாகர்ஜூனா கூலி படத்தில் நடித்தது குறித்து பேசினார். அப்போது, வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் அஜீத்குமார் ஒரு டயலாக் பேசியிருப்பார். நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனா நடிக்கிறது என்று.

- Advertisement -

அதே போல் எத்தனை நாட்களுக்குதான் நல்லவனாக நடிப்பது என்ற மனநிலையில், நடிகர் நாகர்ஜூனா கூலி படத்தில் வில்லனாக நடித்து அசத்தி விட்டார் என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார். இந்த விழாவில் நடிகர் அஜீத்குமார் பெயரையும் அவரது டயலாக்கையும் ரஜினி குறிப்பிட்டு பேசியதே விஜய் மற்றும் அவர்களது ரசிகர்களை வெறுப்பேற்றதான் என்று விமர்சனம் அப்போதே எழுந்தது.

நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு கட்டத்துக்கு பிறகு நடிகர் விஜயின் அபரிமிதமான வளர்ச்சி பிடிக்கவில்லை. அவரை தமிழக மக்கள் அரசியல் களத்தில் எதிர்பார்த்த நிலையில், விஜய் அரசியல் களத்தில் இறங்கியது ரஜினிக்கு ஒரு விதமான சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது. விஜய் போல ரஜினிக்கு துணிச்சல் இல்லை என்று பலரும் விமர்சித்தது இன்னும் விஜய் மீதான கோபத்தை ரஜினிக்கு அதிகப்படுத்தி உள்ளது. அதனால்தான் கூலி பட விழாவில் அஜீத்குமாரை பற்றி ரஜினி பேசியிருக்கிறார் என்று தளபதி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்