- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் நாள் வசூலிலேயே புதிய சாதனையை நிகழ்த்தப் போகும் கூலி... இப்போது வரைக்குமே இத்தனை கோடி...

முதல் நாள் வசூலிலேயே புதிய சாதனையை நிகழ்த்தப் போகும் கூலி… இப்போது வரைக்குமே இத்தனை கோடி ரூபாய் பார்த்திருக்கிறதா… திரும்பிப் பார்க்கும் இந்திய திரை உலகம்…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே தற்போது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, மலையாளத்திலிருந்து சோபின் ஷாகிர், கன்னடாவிலிருந்து உபேந்திரா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

மிக முக்கியமாக இந்தி திரையுலகில் இருந்து அமீர்கான் இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் வந்திருக்கிறார். சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசனும் இருக்க தரமான பான் இந்தியா ப்ராடக்டாக இது வருகிறது. அண்மையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே பேசி இருந்த லோகேஷ் கனகராஜ், இது எல் சி யு வுக்குள் வராது என்று கூறியிருந்தார். ஆனால் ஆக்சனில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளவில்லை என்றும், ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே இந்த திரைப்படம் இருக்கும் என்றும் அவர் அடித்து பேசி இருந்தார். தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் வில்லனாக சைமன் என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார் நாகர்ஜூனா. சத்யராஜ் ரஜினிகாந்த்துக்கு நண்பராக நடித்திருக்கிறாராம். கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

குறிப்பாக வெளிநாடுகளில் வேறு எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டை தாண்டி கேரளா தெலுங்கானா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கூலி திரைப்படத்தின் முன்பதிவு வேறு எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவுக்கு செல்கிறது.

இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 360 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில், தற்போதைய நிலவரத்தின் படி இப்போதே 50 கோடி ரூபாய் வரைக்கும் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வேறு எந்த திரைப்படத்திற்கும் இல்லாத சாதனை என்றும் கூறுகின்றனர். நிச்சயமாக இந்த தொகை உயரும் என்றும் முதல் நாள் வசூல் வேறு எந்த தமிழ் திரைப்படமும் தொடாத அளவுக்கு இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்