- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, தீபாவளிக்கு இரண்டே இரண்டு படங்கள்தான் ரிலீஸ் ஆகப் போகிறதா? என்ன கொடும சார் இது...

என்னது, தீபாவளிக்கு இரண்டே இரண்டு படங்கள்தான் ரிலீஸ் ஆகப் போகிறதா? என்ன கொடும சார் இது என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெஸ்டிவல் பிலிம்ஸ் என்றே பல படங்கள் உருவாவது வழக்கம். அதுவும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த 1980 90களில் தீபாவளி அல்லது பொங்கல் என்றால் கண்டிப்பாக ரஜினி கமல் விஜயகாந்த் நடித்த புதிய படங்கள் ரிலீஸாகும்.

அதே பார்மூலாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய படங்களும் இதுபோன்ற பண்டிகை நாட்களில் தான் வெளியாகும். ஏனெனில் பண்டிகை காலங்களில் தொடர் விடுமுறை காரணமாக தியேட்டர்களில் ரசிகர்கள் வருகை கணிசமாக இருக்கும். குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வருவார்கள் என்பது உறுதி.

- Advertisement -

இந்நிலையில் வருகிற அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை என்ற நிலையில் 2 படங்கள் மட்டுமே ரிலீஸாகும் என்ற சூழல் இப்போது நிலவுகிறது. அதிலும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் சிவகார்த்திகேயன் சிம்பு விக்ரம் சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்கள் இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த டிரெயின் சூர்யா நடித்த கருப்பு போன்ற படங்கள் ரிலீஸ் ஆக தயாராக இருந்தும் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் நடக்காததால் அந்த படங்கள் தீபாவளிக்கு வராது என்று சொல்லப்படுகிறது. கார்த்தி நடித்த சர்தார் 2 விக்னேஷ் சிவன் இயக்கிய எல்ஐகே படங்கள் தீபாவளிக்கு வர வாய்ப்பிருந்தாலும் அதற்கான அறிவிப்பு இதுவரை இல்லை.

- Advertisement -

இப்போதைய நிலவரப்படி வருகிற தீபாவளிக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் படமும், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் என்ற படமும் ரிலீஸாகின்றன. இந்த 2 படங்கள் மட்டுமே தீபாவளிக்கு ரிலீஸ் என்பது உறுதியாகி உள்ளன. மற்றபடி எந்த ஒரு படமும் தீபாவளிக்கு வரும் என்பதில் இதுவரை உறுதி இல்லை.

ஜெயிலர் 2 இந்தியன் 3 ஜனநாயகன் கருப்பு டிரெயின் சர்தார் 2 எல்ஐகே என பல முக்கிய படங்கள் இருந்தாலும் அதில் சில படங்கள் ரிலீஸாக தயாராக உள்ளன. ஆனால் டிஜிட்டல் வியாபாரம் காரணமாக தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை என்ற நெருக்கடியில் இருக்கின்றன. முக்கிய முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் தீபாவளிக்கு இல்லாதது ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

- Advertisement -

சற்று முன்