- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் வடிவேலு குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்… என்ன இப்படி சொல்லிட்டாரு என்று வாய் பிளந்த...

நடிகர் வடிவேலு குறித்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன்… என்ன இப்படி சொல்லிட்டாரு என்று வாய் பிளந்த தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. நடிகர்கள் கவுண்டமணி செந்தில் விவேக் போன்றவர்கள் கிண்டலான வசனங்களால் பொதுவாக டயலாக் டெலிவரியில்தான் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்தார்கள். ஆனால் வடிவேலு மட்டும்தான் உடல் மொழியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவர் திரையில் வந்தாலே அவரை பார்த்தவுடன் ரசிகர்களுக்கு சிரிப்பு வந்துவிடுகிறது.

என் ராசாவின் மனசிலே படம்தான் வடிவேலு நடித்த முதல் படம். ராஜ்கிரண் நாயகனாக நடித்த படமும் இதுதான். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்ற வடிவேலு தொடர்ந்து சின்னக்கவுண்டர் சிங்காரவேலன் தேவர்மகன் என பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெற்றார். குறிப்பாக வி சேகர் இயக்கிய படங்கள் வடிவேலுவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுது் தந்தன.

- Advertisement -

பொங்கலோ பொங்கல் விரலுக்கேத்த வீக்கம் வரவு எட்டணா செலவு பத்தணா நான் பெத்த மகனே காலம் மாறிப்போச்சு போன்ற படங்களில் காமெடி கேரக்டரில் வடிவேலு நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சிம்பு ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் வடிவேலு காமெடி கேரக்டர் முன்னணி காமெடி நடிகராக அவரை மாற்றியது.

சமீபகாலமாக காமெடி கேரக்டரில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகர் வடிவேலு குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்திலும் அடுத்ததாக சமீபத்தில் வெளியான மாரீசன் படத்தில் பகத் ஃபாசிலுடன் படம் முழுக்க பயணிக்கும் அந்த வேலாயுதம் கேரக்டரும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள வெற்றிமாறன், நடிகர் வடிவேலு குறித்து பேசியிருக்கிறார். இதுவரை 7 படங்களை இயக்கியுள்ள இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. என்றாலும் நடிகர் வடிவேலு குறித்து வெற்றிமாறன் விமர்சித்து பேசியிருக்கிறார்.

ஒரு நேர்காணலில் இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது, என்னை பொருத்தவரை தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான். அவருக்கு படிப்பு கிடையாது. சினிமாவிலும் பின்புலம் கிடையாது. ஆனால் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்கும் கதாபாத்திரமாகவே வாழ்வார். அவர் வெறும் காமெடி நடிகர் மட்டும் கிடையாது. அந்த கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்று இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்