- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கிறாரா ரஜினி?.. உண்மை என்ன

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கிறாரா ரஜினி?.. உண்மை என்ன

- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி வெளியானது ஜெயிலர் திரைப்படம். திரைப்படத்தில் மோகன் லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்போடு வெளியான படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. இதனால் ரஜினி கம்பேக் கொடுத்துவிட்டார் என்றும் இனி தான் மட்டும்தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறுகின்றனர். படம் வெளியானதிலிருந்து அட்டகாசமாக இருந்ததாகவும் பல இடங்களில் பழைய ரஜினிகாந்த் ஞாபகத்திற்கு வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

விமர்சன ரீதியாக ஒரு பக்கம் டீசன்டான ரிப்போர்ட் வந்து கொண்டிருக்க வசூல் ரீதியாகவும் நல்ல ரிப்போர்ட்டே வந்துகொண்டிருக்கிறது. படம் வெளியாகி ஒரே வாரத்திலேயே விக்ரம் படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையான 410 கோடி ரூபாயை முறியடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால்சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படம் 375 கோடி வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது. இதுவும் ஒரு நிம்மதியான விஷயம்தான் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே ரஜினிகாந்த் இமயமலை சென்று இருந்தார். அந்த பயணத்தை முடித்துக் கொண்டவர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் ஆகியோரை சந்தித்தார். இந்தச் சந்திப்பை முடித்த பிறகு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று மாலை சந்திக்கவிருக்கிறார்.

- Advertisement -

இந்தச் சூழலில் ரஜினியும் யோகியும் இணைந்து ஜெயிலர் படத்தை லக்னோவில் பார்க்க இருப்பதாகவும் ஒரு தகவல் தீயாக பரவியது. ஆனால் அந்த தகவலில் தற்போது உண்மையில்லை என்று தெரியவந்திருக்கிறது. அதாவது யோகியுடன் சந்திப்பு மட்டுமே நிகழ்த்தும் ரஜினிகாந்த் அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சருடன்தான் ஜெயிலர் படத்தை பார்க்கப் போகிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது

- Advertisement -

சற்று முன்