பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸூக்கு எப்போதோ தயாராகி விட்டது. இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் எல்லாமே ஏறக்குறைய முடிந்துவிட்டது. நடிகர் விஜயும் படத்துக்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார். ஜனநாயகன் படம் சார்ந்த பணிகள் எதுவும் இப்போது இயக்குனருக்கு இல்லை.
அதனால்தான் இயக்குனர் எச் வினோத் அடுத்ததாக அவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கான ப்ரீ புரடக்சன் பணிகளில் இப்போது ஆர்வம் காட்டி வருகிறார். ஜனநாயகன் படம் பிரமோசன் பணிகளை டிசம்பர் மாதம் துவங்க உள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி தான் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே ஜனநாயகன் படம் குறித்த சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. இந்த லேட்டஸ்ட் அப்டேட் படி இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் ஒரு காட்சியில் நடிக்கிறார். ஒரு போராட்ட களத்தில் தீப்பந்தம் ஏந்தியபடி அவர் நடித்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
தனது நெருங்கிய நண்பர், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்தை, அப்படி ஒரு காட்சியில் நடிக்க வைத்ததே நடிகர் விஜய்தான். இயக்குனரிடம் சொல்லி அந்த காட்சியில் புஸ்லி ஆனந்தை நடிக்க செய்திருக்கிறார். அதே போல் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன்.
நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் என மாஸ் ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி. அதே போல் பீஸ்ட் படத்தை இயக்கியவர் நெல்சன். மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். 3 பேருமே இப்போது பெரிய இயக்குனர்களாகவும் இருப்பதால், தனது கடைசி படத்தில் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை நடிகர் விஜய் தானாக முன்வந்து தந்திருக்கிறார்.
அதன்படி ஜனநாயகன் படத்தில் விஜய் பிரஸ்மீட்டில் கலந்துக்கொள்ளும் ஒரு காட்சி வருகிறது. அதில் பத்திரிகையாளர்களாக அட்லி லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் விஜயிடம் கேள்விகள் கேட்பது போல் அந்த காட்சியை எடுத்துள்ளனர். வழக்கமாக தவெக தலைவரான நடிகர் விஜய், பிரஸ்மீட் தருவதில்லை. ஆனால் ஜனநாயகன் படத்தில் தனது நெருக்கமான இயக்குனர்களுக்காக பிரஸ்மீட் தந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





