தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகை சமந்தா. தமிழில் விஜய் தனுஷ் சூர்யா விக்ரம் சிவகார்த்திகேயன் என முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் சமந்தா ஜோடியாக நடித்திருக்கிறார். குறிப்பாக அஞ்சான் சீமராஜா தங்கமகன் தெறி கத்தி 10 எண்றதுக்குள்ள என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.
நடிகை சமந்தா கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். குபேரா தோழா கூலி படங்களில் நடித்த நடிகர் நாகர்ஜூனாவின் மகன்தான் இவர். ஆனால் திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்யா சமந்தா இடையே ஏற்பட்ட மோதலால் இருவரும் பிரிந்து விட்டனர். சட்டப்படி விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர்.
அதன்பிறகு சில மாதங்களுக்கு முன்புதான், நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சமந்தா இன்னும் முரட்டு சிங்கிளாக தான் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே சில இயக்குனர்களுடன் அவர் கிசுகிசுவிலும் சிக்கினார். சமீபமாக ராஜ் நெடிமூரே என்பவருடன் சமந்தா நெருக்கமான நட்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த இயக்குனர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இன்னும் விவாகரத்து பெறாத காரணத்தால், இந்த காதல் குறித்து நடிகை சமந்தா வெளியே கூறாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சினிமா நடிகையாக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராகவும் சமந்தா மாறியிருக்கிறார். சமீபத்தில் அவரது நிறுவனம் தயாரித்த சுபம் என்ற படம் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சமந்தா கூறியதாவது, இப்போது நான் என்னை உற்சாகப்படுத்தும் விஷயங்களை மட்டுமே செய்கிறேன். அது சினிமாவாக இருந்தாலும் சரி உடற்பயிற்சியாக இருந்தாலும் சரி. கடந்த காலங்களில் நான் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் அவற்றில் பல கேரக்டர்கள் என்னை திருப்தி படுத்தவில்லை.
இப்போது அது எந்த சினிமாவாக இருந்தாலும் சரி நான் அதை முழு மனதுடன் கவனித்துடனும் செய்கிறேன். ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிப்பதற்கும் எனக்கு இனி பயமில்லை. என் உடல் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் தான் நான் என் வேலையை குறைத்து விட்டேன் என்று நடிகை சமந்தா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





