- Advertisement -
Homeபொழுதுபோக்குகைதி லியோ படங்களில் செய்த அந்த தவறை கூலி படத்தில் நான் செய்யவில்லை - இயக்குனர்...

கைதி லியோ படங்களில் செய்த அந்த தவறை கூலி படத்தில் நான் செய்யவில்லை – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இதுவரை 5 படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு இயக்கனர் லோகேஷ் கனகராஜ் தந்திருக்கிறார். மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் ரூ. 1000 கோடி வசூலை கடந்திருக்கின்றன. தெலுங்கில் கன்னடத்தில் இந்தியில் வெளியான பல படங்கள் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்திருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் அந்த சாதனையை எந்த திரைப்படமும் எட்டவில்லை.

- Advertisement -

அதனால் கூலி படம் அந்த சாதனையை நிகழ்த்த வேண்டும். லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணியில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த பான் இந்தியா படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா மலையாள நடிகர் சௌபின் சாஹிர் இந்தி நடிகர் அமீர்கான் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மற்றும் நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி படப்பிடிப்பை துவங்கும் முன்பே ஒரு முக்கிய நிபந்தனையை தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி ஓகே வாங்கி இருக்கிறார். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி மற்றும் லியோ போன்ற படங்கள் உருவான போது ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்து விட்டு அதற்கேற்றவாறு லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பை நடத்தினார்.

- Advertisement -

ஆனால் திட்டமிட்டபடி சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த தாமதம் ஏற்பட்டது. அதனால் ரிலீஸ் தேதியை மனதில் வைத்துக் கொண்டு கடைசி நேரத்தில் அவசர அவசரமாக வேலையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. அதனால்தான் லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அவரால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்றும் விமர்சனம் எழுந்தது.

அதனால் கூலி படம் சூட்டிங் துவங்கும் முன்பே இதுபோல் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டு சூட்டிங்கை நடத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் படம் தயாரான பிறகு நானே சொல்கிறேன். அதன்பிறகு ரிலீஸ் தேதி அறிவிக்கலாம் என்று கூறிவிட்டார். கூலி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்து எடிட்டிங் பணிகள் நிறைவடைந்தது. பிறகு படத்தை பார்த்து திருப்தி ஏற்பட்ட பின்புதான் கூலி படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் அறிவிக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சற்று முன்