கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் தலைவன் தலைவி. நம்ம வீட்டுப்பிள்ளை கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். எதற்கும் துணிந்தவன் பட தோல்விக்கு பிறகு அவர் இயக்கிய தலைவன் தலைவி படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
விஜய் சேதுபதி நித்யாமேனன் கணவன் மனைவியாக நடித்த இந்த படம், பல்வேறு கடும் விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக படம் முழுக்க விஜய் சேதுபதியும் நித்யாமேனனும் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். என்ன காரணம் என்றே இல்லாமல் சண்டை போடுகிறார்கள். பிரிகிறார்கள். மீண்டும் இணைகிறார்கள், மீண்டும் சண்டை போடுகிறார்கள் என படம் முழுக்க ஒரே சண்டை பிரிவுமாக தான் இருந்தது.
வாங்கிய சம்பளத்துக்கு மேல் விஜய் சேதுபதியும் நித்யாமேனனும் நடித்திருக்கின்றனர். இந்த படம் பெரிய சொதப்பலாக இருக்கிறது என்று படம் பார்த்த விமர்சித்திருந்த நிலையிலும், தலைவன் தலைவி படம் தியேட்டர்களில் 2 வாரங்களுக்கு மேல் ஓடியது. மொத்த வசூலும் ரூ. 90 கோடியை கடந்த நிலையில், என்ன கொடும சார் என்று பலரும் ஆச்சரியப்படவே செய்தனர்.
எந்த விதத்திலும் ரசிகர்களை கவர வாய்ப்பில்லாத இந்த காட்டு மொக்கை படமாக தலைவன் தலைவி இருந்தும் எப்படி தியேட்டர்களில் ஓடுகிறது, அதுவும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக இருக்கிறது என்று ரசிகர்களுக்கு குழப்பமே நிலவியது. என்றாலும் ஏதோ ஒரு விதத்தில் வேறு படங்களே வராததால் இந்த படம் ஓடிவிட்டதா என்றும் பலர் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 22ம் தேதி தலைவன் தலைவி படம் வெளியானது. தியேட்டரில் இந்த படத்தை பார்க்காமல் தவற விட்ட பெரும்பாலானோர் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்தனர். இதில் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் ஓவர் ஆக்டிங்கில் ஒருவரை ஒருவர் ஓவர் டேக் எடுத்திருந்ததை பார்த்த ரசிகர்கள் விரக்தியின் எல்லைக்கே போய்விட்டனர்.
படம் முழுக்க ஒரே கிரிஞ்சா இருக்குது, இந்த படத்தை இப்படி ஆஹா ஓஹோ ன்னு கொண்டாடினீங்க? இந்த படத்தில் ரசிக்கிற மாதிரி என்ன விஷயங்கள் தான் இருக்குது? அதுவும் அடிக்கடி பொண்டாட்டிகிட்ட அடி வாங்குற, காலில் விழுகிற கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பு, நித்யாமேனனின் அராத்து தனமான நடிப்பு பார்க்கவே எரிச்சலா இருக்குது, உட்காரவே முடியலையே? என்று பலரும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர்.





