- Advertisement -
Homeபொழுதுபோக்குஅல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த டாப் காமெடி நடிகர்... மெர்சல்...

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த டாப் காமெடி நடிகர்… மெர்சல் அப்டேட் இதோ…

- Advertisement -

புஷ்பா திரைப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுனனின் மார்க்கெட் வேறு லெவலுக்கு சென்று விட்டது என்றே கூறலாம். இந்திய சினிமா அளவில் மோஸ்ட் வான்டெட் ஹீரோவாக அவர் மாறியிருக்கிறார். தெலுங்கு திரை உலகை தாண்டி அவருக்கு பிற சினிமா உலகிலும் ரசிகர்கள் இருப்பதால், அல்லு அர்ஜூனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

இதில், அடுத்ததாக அட்லியுடன் கைகோர்த்து இருக்கிறார் அல்லு அர்ஜுன். ஏற்கனவே அட்லி, ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்து விட்டார். உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. அது மட்டுமல்ல அட்லியின் லெவலும் இந்த திரைப்படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது.

- Advertisement -

ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார் ஷாருக்கான். தமிழில் இந்த திரைப்படம் பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் இந்தி சினிமாவுக்கு அது மிகவும் புதியது என்பதால், ஜவான் இன்றளவும் அங்கு பேசப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் அட்லி அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து இருக்கிறார்.

இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட் செலவில் எடுக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. சயின்டிஃபிக் படமாகவும் அதே சமயம் வரலாறு சார்ந்தும் இதன் திரைக்கதையை அட்லி அமைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அதுமட்டுமல்ல அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் சொல்கிறார்கள். தாத்தா தந்தை மற்றும் மகன் என மூன்று வேடங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். படத்தின் டாபிக்ஸ் காட்சிகளுக்காக, அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்து பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார்கள். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதுபோக நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் என மூன்று நடிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது மும்பையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அல்லு அர்ஜுன், மிருணாள் தாகூர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். அது மட்டுமல்ல, இந்த சூட்டிங்கில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இணைந்து இருப்பதாக தகவலுக்கு செய்துள்ளது. அவருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை அட்லி கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்