- Advertisement -
Homeபொழுதுபோக்குமன்சூர் அலிகானை கட்சியை விட்டு நீக்கிய பொதுச் செயலாளர், அவர் ஆரம்பித்த கட்சியில் இப்படி ஒரு...

மன்சூர் அலிகானை கட்சியை விட்டு நீக்கிய பொதுச் செயலாளர், அவர் ஆரம்பித்த கட்சியில் இப்படி ஒரு கூத்து – அவரை வெச்சு காமெடி கீமெடி பண்றாங்களோ?

- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான், ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடனக்குழுவில் ஒருவராக நடனமாடியவர். அதன்பிறகு வில்லன்களில் அடியாட்களில் ஒருவராக இருந்து, ஹீரோவிடம் இருந்து அடிவாங்குவார். மன்சூர் அலிகானை தொடர்ந்து பல படங்களில் பார்த்து வந்த நடிகர் விஜயகாந்த், தனது கேப்டன் பிரபாகரன் படத்தில், வீரபத்ரன் என்று கேரக்டரில் நடிக்க வைத்தார்.

சந்தன கடத்தலை மையப்படுத்திய அந்த படத்தில், வீரபத்ரனாக மிக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார் மன்சூர் அலிகான். அதன்பிறகு பல படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் மன்சூர் அலிகான் நடித்தார். அவரே சில படங்களை தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்தும் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

- Advertisement -

ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜூன், விஜய், சூர்யா, அஜீத் என பலதரப்பட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்து வரும் மன்சூர் அலிகான், சமீபத்தில் லியோ படத்திலும் நடித்திருந்தார். அப்போது, வில்லன் ரோலில் இந்த படத்தில் நடிப்பதால் திரிஷாவை ரேப் செய்யும் காட்சிகள் போல ஏதாவது இருக்கும் என நினைத்தேன். ஆனால் திரிஷாவை கண்ணிலேயே டைரக்டர் காட்டவில்லை என்று அவர் காமெடியாக பேசியது பெரிய சர்ச்சையானது.

இந்த விவகாரத்தில் திரைபிரபலங்கள் பலரும், திரிஷாவுக்கு ஆதரவும், மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனமும் தெரிவித்தனர். இதில் தன்னை மிகவும் அவதூறாக பேசியதாக திரிஷா, குஷ்பு மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது கோர்ட்டில் மன்சூர் அலிகான் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்தது எல்லாம் பயங்கர வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்த மன்சூர் அலிகான், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட, அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். தனக்கு ஒரு சீட் ஒதுக்கித் தருமாறு அவர் கேட்டு வருகிறார். அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தையில் இதற்கான முடிவு தெரிவிக்கப்படும் என அதிமுகவினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் என்பவர், அந்த கட்சியில் இருந்து தலைவர் மன்சூர் அலிகானை நீக்கி விட்டதாக அறிவித்துள்ளார். கட்சியின் பொதுச்செயலாளருக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இனி பொதுச்செயலாளர் வழிகாட்டுதலில் அந்த கட்சி செயல்படும் எனவும், மன்சூர் அலிகானை நீக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரே ஆரம்பித்த கட்சியில், அவரை நீக்குவதை பார்த்து காமெடி கீமெடி பண்ணறாங்களா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்