- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர்… வரவேற்ற இராணுவ வீரர்கள் - அப்போது எம்ஜிஆர்...

படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர்… வரவேற்ற இராணுவ வீரர்கள் – அப்போது எம்ஜிஆர் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

தமிழக வரலாற்றில் சினிமா, அரசியல் என்ற இரண்டு துறைகளிலுமே ஒரு மாபெரும் கலைஞனாக, தலைவராக மாபெரும் வெற்றி பெற்றவர் ஒருவர் எம்ஜிஆர் மட்டும்தான். இன்றும் எம்ஜிஆர் படங்களை பார்க்கவும் கொண்டாடவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.அதே போல் எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்ட பற்று மிக்க தொண்டர்களும் இருக்கின்றனர்.

எம்ஜிஆர் மட்டும் இப்போதும் நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ்ந்து இருந்தால் அவர்தான் முதலமைச்சராக இருந்திருப்பார் என்று பலரும் சொல்வதுண்டு. அந்தளவுக்கு அவர் இந்த மண்ணை விட்டு மறைந்து 37 ஆண்டுகள் கழிந்தும் அவரது புகழ் இன்றும் மங்காமல் மறையாமல் இருக்கிறது என்பதுதான் அதற்கு அடையாளமாக உள்ளது.

- Advertisement -

எம்ஜிஆரை பொருத்த வரை அவரது சிறந்த நேர்மையான நிர்வாகம்தான் இன்றும் அவரை கொண்டாட வைக்கிறது. அதே போல் மற்றவர்களுக்கு வாரி வழங்கும் உள்ளமும் கொடை வள்ளல் தன்மையும் அவரிடம் நிறைந்து காணப்பட்டது. யாரும் பசியால் வாடக்கூடாது, வறுமை நிலையில் வாழக்கூடாது என்ற உயர்ந்த கொள்கைகளை கொண்டவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்றால் அது மிகையல்ல.

பல ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சினிமாவில் அப்போது பிஸியாக நடித்துகு்கொண்டு இருந்தார். இதயவீணை படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த பிரபல ஹோட்டல் ஒன்றில் எம்ஜிஆர் தங்கியிருந்தார். இதை அறிந்த ராணுவத்தினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

- Advertisement -

பின்னர் தங்களது ராணுவ நலச்சங்கத்துக்கு நேரில் வருகை தர வேண்டும் என்று எம்ஜிஆருக்கு அழைப்பு விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட எம்ஜிஆர், படப்பிடிப்பு இல்லாத ஒரு நாளில் அங்கு சென்று சந்தித்து அவர்கள் மத்தியில் பேசி உற்சாகப்படுத்தினார். அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ராணுவ நலச் சங்கத்திற்கு ஒரு பெரிய தொகையை நிதியாக வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்ஜிஆர்க்கு நன்றி தெரிவித்தனர். அவருடன் இருந்து அனைவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இப்படி உதவி கேட்காமலேயே, தானாக முன்வந்து உதவும் குணம் கொண்டவராக எம்ஜிஆர் இருந்ததால்தான் இப்போதும் அவரை மக்கள், வள்ளல் என்று கொண்டாடுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்