- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் நடிகர் நரேன் நடித்திருக்கிறாரா? - ஆச்சரியப்பட்ட தளபதி ரசிகர்கள்,...

ஜனநாயகன் படத்தில் இப்படி ஒரு கேரக்டரில் நடிகர் நரேன் நடித்திருக்கிறாரா? – ஆச்சரியப்பட்ட தளபதி ரசிகர்கள், அப்போ படத்தோட ஜானர் அதுதானா?

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் இயக்குனராக அறிமுகமான படம் சித்திரம் பேசுதடி. இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் நரேன். இந்த படம் நரேனுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்திலும் நரேன் மீண்டும் நாயகனாக நடித்திருந்தார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நரேன் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக பிரசன்னா நடித்திருந்தார். மிஷ்கின் இயக்கிய இந்த 2 படங்களுமே வெற்றிப் படங்களாக இருந்தன.

தொடர்ந்து தம்பிக்கோட்டை நெஞ்சிருக்கும் வரை பள்ளிக்கூடம் முகமூடி கைதி விக்ரம் என பல படங்களில் நரேன் நடித்திருக்கிறார். இதில் சில படங்களில் நெகட்டிவ் ரோலிலும் நரேன் நடித்துள்ளார். மேலும் மலையாளம் தெலுங்கு மொழி படங்களிலும் நரேன் நடித்த நிலையில் பெரிய அளவில் அவர் சினிமாவில் நட்சத்திர நடிகராக வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் கைதி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நரேன் நடித்திருந்தார். படம் முழுவதும் அவரது கேரக்டர் படத்தின் கதைக்களத்தில் பயணிக்கும்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்திருந்தார். அதே போல் அடுத்ததாக கமல் நடித்த விக்ரம் படத்திலும் நரேனுக்கு நல்ல அழுத்தமான ரோலில் லோகேஷ் கனகராஜ் நடிக்க செய்திருந்தார்.

எந்த கேரக்டர் என்றாலும் அதில் சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நல்ல நடிப்பு கலைஞராக நரேன் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் நடிகர் நரேன் நடித்தருக்கிறார். இந்த படத்தில் அவர் நடித்துள்ள ரோல் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி பாபி தியோல் பிரகாஷ் ராஜ் கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் நரேனும் நடித்துள்ளார்.

ஜனநாயகன் படத்தில் நடிகர் நரேன், கேமியோ ரோலில் நடித்துள்ளார். சில காட்சிகளில் மட்டுமே அவர் வந்து செல்வது போல படத்தில் அவரது கேரக்டர் உள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் விஞ்ஞானியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் அரசியல் படமா, சயன்ஸ்பிக்சன் படமா என்ற சந்தேகமும் குழப்பமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் நான் விஞ்ஞானியாக நடித்திருக்கிறேன் என்று நடிகர் நரேன் ஒரு நேர்காணலில் அவரே கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்