- Advertisement -
Homeபொழுதுபோக்குவிபத்தில் சிக்கினாரா விஜய் பட நடிகை…? அப்படி ஒரு தகவல் பரவியதால் ஏற்பட்ட குழப்பம் -...

விபத்தில் சிக்கினாரா விஜய் பட நடிகை…? அப்படி ஒரு தகவல் பரவியதால் ஏற்பட்ட குழப்பம் – அவரே தந்த விளக்கம்!

- Advertisement -

சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில் எந்த ஒரு விஷயம் என்றால் அது காட்டுத்தீ போல சில நிமிடங்களில் உலகம் முழுவதும் பரவி விடுகிறது. அதே நேரத்தில் உண்மைகளை காட்டிலும் பொய்யான தகவல்களும் வதந்திகளும் மின்னல் வேகத்தில் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்து விடுகிறது. அதிலும் பரபரப்பான பொய்யான தகவல்களை பரப்புபவர்களால் இணையத்தில் எப்போதுமே தீப்பொறி பறக்கிறது.

குறிப்பாக பிரபல நடிகர்கள் நடிகைகள் குறித்த வதந்திகள்தான் சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. திடீரென சில நடிகர்கள், சில நடிகைகளுக்கு திருமணம் என்ற தகவல் வைரலாகிறது. சில நேரங்களில் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இத்தகைய பொய் தகவல்களை சிலர் பரப்பி விடுகின்றனர். அதே போல் நம்ப முடியாத விஷயங்களை எல்லாம் வதந்தியாக ஷேர் செய்து பரபரப்பாக்கி விடுகின்றனர்.

- Advertisement -

அதிலும் வயதான மூத்த நடிகர் நடிகைகள் சிலரை திடீரென இறந்து விட்டதாக மறைவு செய்திகளை புகைப்படங்களுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். பிறகு சம்பந்தப்பட்ட அவர்களே, அது உண்மை இல்லை. இதோ நான் உயிருடன்தான் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகிக்கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலும் சிக்கி விட்டார். துப்பாக்கி ஜில்லா போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். விவேகம் பாயும்புலி அழகுாஜா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் ஒரு வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நான் விபத்தில் சிக்கி விட்டதாகவும் இப்போது உயிருடன் இல்லை என்றும் சில அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் பரவி வருகிறது. இதனை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

நான் கடவுளின் அருளால் நலமாக உள்ளேன். உயிருடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இது போன்ற வதந்திகளை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்று தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன். உண்மையையும் நேர்மறை விஷயங்களையும் நாம் பரப்புவோம் என்று அதில் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்