- Advertisement -
Homeபொழுதுபோக்குவாரிசு நடிகர்கள் தங்களது தந்தை மீது பழியை தூக்கிப் போடக் கூடாது, நல்ல படங்களை தவிர்த்தது...

வாரிசு நடிகர்கள் தங்களது தந்தை மீது பழியை தூக்கிப் போடக் கூடாது, நல்ல படங்களை தவிர்த்தது யார்? – நடிகர் சாந்தனுவை விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் திரைக்கதை ஆசிரியர் என பல சாதனைகளைப் படைத்தவர் கே பாக்யராஜ். ஆனால் அவரது மகன் சாந்தனு சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. பல படங்களில் அவர் நடித்தும் ஒரு நல்ல அங்கீகாரத்தை அடையாளத்தை ரசிகர்களிடம் பெறவில்லை. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சாந்தனு மிகவும் வருத்தப்பட்டு பேசியிருந்தார்.

நான் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் எவ்வளவு நல்ல படம் பண்ணினாலும் அது ஜெயித்தது என்று சொல்லவே மாட்டாங்க. என்ன பண்ணி இருக்கான் என்று பார்க்காமல் பாக்யராஜ் மகனாக பார்க்கிறார்கள். நானும் சராசரி மனுஷன் தான். அடுத்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் மணிகண்டனாக பிறக்க வேண்டும் என்று சாந்தனு அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, உங்களைப் போன்ற சினிமா வாரிசுகளின் திரைப்படங்கள் தோற்க முக்கியமான காரணம் தவறான கதை மற்றும் இயக்குனர் தேர்வு தான். அதை உணர்ந்து சரி செய்து வெற்றி பெற வேண்டும். அதை விட்டுவிட்டு பழியை தூக்கி தந்தைகள் மீது போடுவது கையாலாகாத செயலின் வெளிப்பாடு.

சிவகார்த்திகேயனாக பிறந்தால் ஜெயித்து விட முடியாது அவர் விஜய் டிவியில் அது இது எது எனும் நிகழ்ச்சியில் சிறந்த காமெடி தொகுப்பாளராக இருந்து மக்களின் ஆதரவை பெற்றார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அருமையாக மிமிக்ரி செய்து வென்றார். சினிமா நிகழ்ச்சி மேடைகளில் தொகுப்பாளராக இருந்தார். சில படங்களில் காமெடியனாக நடித்தார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த பிறகுதான் ஹீரோ ஆனார். இதில் சில முக்கிய ஒற்றுமைகள் மணிகண்டனுக்கும் உண்டு.

- Advertisement -

ஆனால் நீங்கள் எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாகி விட்டீர்கள். அதை பயன்படுத்தி முன்னுக்கு வராதது யாருடைய தவறு? இத்தனை வருடங்களில் உங்களைப் போன்ற வாரிசுகள் வளர்த்துக் கொண்ட தனித்திறமைகள் என்ன? அது மக்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்ந்தது? ஜிம்முக்கு செல்வது குதிரை ஓட்டுவது சிலம்பம் சுற்றுவது என உடம்பை பிட்டாக வைத்திருக்க வேண்டியது ஹீரோக்களின் கடமை. அது தனித்திறமை அல்ல.

சுப்ரமணியபுரம் காதல் களவாணி பாய்ஸ் டாணாகாரன் மகாராஜா போன்ற பல படங்களை தவறவிட்டது நீங்கள் தானே? இதில் ஷங்கர் தவிர்த்து அனைவருமே புது இயக்குனர்கள். அவர்களை நீங்கள் நம்பவில்லை. அவர்களை நம்பிய விமல் விக்ரம் பிரபு விஜய் சேதுபதி ஆகியோர் நீங்க தவறவிட்ட படங்களில் நடித்து வெற்றி பெற்றனர். ஆகவே தோல்விக்கான பழியை தூக்கி விதி மேல் போடாமல் மதியை பயன்படுத்தி ஒரு ஹிட்டாவது தரும் வேலையை சரியான முறையில் செயல்படுத்துங்கள் என்று சாந்தனுவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்