தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களின் வரிசையில் நட்சத்திர ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். அமரன் படத்துக்கு பிறகு அவரது சம்பளமும் ரூ. 70 கோடிக்கு உயர்ந்து விட்டது. அவரது 25வது படம் பராசக்தி வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் அதர்வா ரவி மோகன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
இன்றைய நட்சத்திர ஹீரோக்களில் அதிக கவனம் பெற்ற ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் மாறியிருக்கிறார். குறிப்பாக டீன் ஏஜ் வயதினர் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஃபேமிலி ஆடியன்ஸ் விரும்பும் ஒரு ஹீரோவாக மாறியிருக்கிறார். ரஜினி விஜய்க்கு பிறகு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இப்போது இருந்து வருகிறார்.
குறிப்பாக நம்ம வீட்டுப்பிள்ளை சீமராஜா ரெமோ காக்கிச்சட்டை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் போன்ற பேமிலி சப்ஜெக்ட் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஒரு ஆதரவை பெற்றுத் தந்தது. இப்போது அந்த வரிசையில் மதராஸி படத்துக்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி படம், சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது. ஆக்சன் காதல் கலந்து உருவாக்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையல் 5 நாட்களில் 78 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனை போலவே சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர் கேபிஒய் பாலா. கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற ரியாலிடி ஷோக்கள் பாலாவுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தன. என்றாலும் அவர் செய்த சமூக சேவைகளும் உதவிகளும்தான் இன்று அவரை ஒரு முக்கிய இடத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறது.
இயக்குனர் ஷெரீப் இயக்கத்தில் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமான படம் காந்தி கண்ணாடி. இந்த படம் கடந்த 5ம் தேதி வெளியான நிலையில், 5 நாட்களில் இதுவரை வசூல் நிலவரம் 2.05 கோடி ரூபாயை கடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருவதால் இன்னும் பல படங்களில் ஹீரோ வாய்ப்பு கேபிஒய் பாலாவுக்கு தேடி வரும் என்றும் கூறப்படுகிறது.





