- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இசையமைப்பாளரின் மகனுடன் கைகோர்க்கிறாரா இயக்குனர் லிங்குசாமி... அதுவும் அந்த ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக...

பிரபல இசையமைப்பாளரின் மகனுடன் கைகோர்க்கிறாரா இயக்குனர் லிங்குசாமி… அதுவும் அந்த ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது எடுக்கப்படுகிறதா?

- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்களை எடுப்பதில் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் லிங்குசாமி. மம்முட்டி முரளி தேவயானி ரம்பா உள்ளிட்டோரை வைத்து ஆனந்தம் திரைப்படத்தை அவர் முதன்முதலாக இயக்கினார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதன் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளியானது ரன் திரைப்படம். மாதவன் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம், காதல் கலந்த கமர்சியல் படமாக எடுக்கப்பட்டு வெற்றியை வாரி இறைத்தது. வித்யாசாகர் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம், லிங்குசாமியின் கிராஃப் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.

- Advertisement -

தொடர்ந்து அவர் சண்டக்கோழி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் உச்சபட்ச இயக்குனர் என்ற பெருமையை பெற்றார். முதலில் இந்த திரைப்படத்தின் கதையில் விஜய் நடிப்பதாகத்தான் இருந்ததாம். ஆனால் அவர் ஒப்புக் கொள்ளாத சூழலில், விஷாலுக்கு இந்த திரைப்படம் சென்று இருக்கிறது. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கூட்டி செதுக்கியிருந்த லிங்குசாமி இந்த திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா அளவில் கவனிக்கப்பட்டார்.

பிறகு, பீமா, பையா உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை அவர் இயக்கினார். லிங்குசாமி இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அஞ்சான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இங்கிருந்து லிங்கு சாமியின் இறங்குமுகம் ஆரம்பித்தது என்றே கூறலாம். இதன் பிறகு வெற்றி திரைப்படங்களை கொடுக்க முடியாமல் அவர் தடுமாறி வருகிறார்.

- Advertisement -

தொடர்ந்து பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க அவர் முயற்சி செய்து வந்த சூழலில், அத்திட்டம் கைகூடவில்லை. முதலில் கார்த்தி நடிப்பதாக இருந்து பின்னர் அது ஆர்யா கைக்கு மாறியது. அதன் பிறகும் அந்தப் பணியில் தாமதம் ஏற்பட அதர்வாவின் தம்பியை வைத்து பையா 2வை எடுக்கத் திட்டமிட்டார் லிங்குசாமி. ஆனால் அது நிறைவேறவில்லை.

இப்படி ஆன சூழலில் தற்போது பிரபல இசை அமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்த்தனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் லிங்குசாமி. இதுவும் காதல் கலந்த கதையாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் இது பையா படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என்று சிலர் பேசுகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்