- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அது வாய்ப்பது பிறவிப்பயன் - விரைவில் அறிவிப்பு வரும், நடிகர் பார்த்திபன் வெளியிட்ட தகவல்!

எனக்கு அது வாய்ப்பது பிறவிப்பயன் – விரைவில் அறிவிப்பு வரும், நடிகர் பார்த்திபன் வெளியிட்ட தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இயக்குனராக வலம் வருபவர் பார்த்திபன். கே பாக்யராஜிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிசெய்த பார்த்திபன், புதிய பாதை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் நாயகனாகவும் அவரே நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக உள்ள நடிகர் பார்த்திபன், நல்ல படைப்புகளை வித்யாசமான முயற்சிகளை செய்து அதை ரசிகர்களுக்கு தருபவர். அவர் மட்டுமே நடித்த ஒத்த செருப்பு படமும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் படமும் பேசக்கூடிய படங்களாக இருந்தன.

- Advertisement -

நடிகர் பார்த்திபனுக்கு 2 மகள்கள் மற்றும் ராதாகிருஷ்ணன் என்ற மகனும் இருக்கிறார். இவர் பார்த்திபன், சீதா தம்பதியின் வளர்ப்பு மகன் என்று கூறப்படுகிறது. திருமணமான 10 ஆண்டுகளில் பார்த்திபனை பிரிந்த நடிகை சீதா, பிறகு சதீஷ் என்ற டிவி சீரியல் நடிகரை திருமணம் செய்தார். பிறகு அவரை பிரிந்து விட்டார். ஆனால் நடிகர் பார்த்திபன் சீதாவை பிரிந்த பின் மறுமணம் செய்யவில்லை.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, ராக்கி பார்த்திபன் என் மகன்.என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்றிருக்கிறார்.

- Advertisement -

ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார்.

அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிடமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart. அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள் என்று அந்த பதிவில் நடிகர் பார்த்திபன் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்