- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமாரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வந்த சிக்கல், பல ஹீரோக்களுக்கு இது தொடர வாய்ப்பு இருப்பதாக...

அஜீத்குமாரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வந்த சிக்கல், பல ஹீரோக்களுக்கு இது தொடர வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவல்!

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரிலும் பான் இந்தியா என்ற பெயரிலும் நிறைய படங்கள் வருகின்றன. பெரும்பாலும் இயக்குனர் மற்றும் ஹீரோ இமேஜை நம்பி எடுக்கப்படும் இந்த படங்கள் ஆக்சன் அதிரடி படங்களாக தான் இருக்கின்றன. படம் முழுவதும் வெட்டு குத்து துப்பாக்கி சத்தம் ரத்தம் வன்முறை என ஏ அல்லது யு/ஏ சான்றுகள் பெற்று ரிலீஸாகின்றன.

கதை திரைக்கதையை நம்பாமல் ஹீரோ டைரக்டர் மியூசிக் டைரக்டர் ஆகியோரை மட்டுமே நம்பி உருவாகும் இந்த படங்கள் வெளியான முதல் நாள் முதல் காட்சிக்கு பிறகு காட்டு மொக்கை படங்கள் என்ற விமர்சனங்களை பெறுகின்றன. அதனால் பல நூறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.

- Advertisement -

இதனால் சமீபகாலமாக தயாரிப்பாளர்கள் உஷாராகி வருகின்றனர். கதை திரைக்கதை இல்லாமல் வெறும் பில்டப் சமாச்சாரங்களை மட்டுமே வைத்து ஒப்பேத்தும் இயக்குனர்கள் ஹீரோக்களை இனியும் நம்பினால் அதல பாதாளத்தில் இறங்கி கதைதான் என்பதை உணர்ந்த அவர்கள் பெரிய ஹீரோக்கள் படங்கள் தயாரிக்க முன்வராமல் தவிர்க்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அவரது 164 படத்தை தயாரிக்க 10க்கும் மேற்பட்ட முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அத்தனை நிறுவனங்களுமே நோ சொல்லி விட்டன. அதற்கு முக்கிய காரணங்கள் அஜீத்குமாரின் சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட் ஆகியவை தான்.

- Advertisement -

இப்போது அதே போன்ற ஒரு நிலைமை நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வந்துவிட்டது. மதராஸி படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் அவர் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் புஸ்கர் காயத்ரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க எஸ்கே ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை. விக்ரம் வேதா என்ற வெற்றிப்படத்தை கொடுத்தவர்தான் புஸ்கர் காயத்ரி.

மதராஸி படத்தை தயாரித்த நிறுவனத்திடம் கூட சிவகார்த்திகேயன், புஸ்கர் காயத்ரி படம் குறித்து ஷூட்டிங் நடந்த போதே பேசியிருக்கிறார். ஆனால் அவர்கள் தரப்பில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அதனால் இனி ஹீரோக்கள் சம்பளத்தையும் இயக்குனர்கள் பெரிய பட்ஜெட் படங்களையும் குறைத்துக் கொண்டால் மட்டுமே தயாரிப்பாளர்கள் படங்களை தயாரிக்க முன்வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்