- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது சம்பளத்தை குறைக்காமல் நடிகர் அஜீத்குமார் பிடிவாதமாக இருப்பது ஏன்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை -...

தனது சம்பளத்தை குறைக்காமல் நடிகர் அஜீத்குமார் பிடிவாதமாக இருப்பது ஏன்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை – வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின. இதில் விடாமுயற்சி பிளாப் ஆனாலும் குட் பேட் அக்லி படம் ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. ரூ. 230 கோடிக்கு மேல் வசூல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களில் கடந்தாண்டிலேயே நடித்து முடித்துவிட்ட நடிகர் அஜீத்குமார் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ஸ்பெயின் இத்தாலி துபாய் ஜெர்மனி என வெளிநாடுகளில் நடந்துவரும் கார் பந்தயங்களில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

- Advertisement -

இதுவரை நடந்த போட்டிகளில் நான்கைந்து முறை விபத்திலும் அவர் சிக்கியிருக்கிறார். அதே நேரத்தில் சில போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக உள்ள அவர் போட்டியாளராகவும் ஒரு அணிக்கு தலைவராகவும் இருந்து தனது குழு போட்டியாளர்களை வழிநடத்துகிறார்.

கார் ரேஸில் ஜெயிப்பது மட்டுமின்றி கார் ஓட்டுவதில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை கார் ரேஸில் பெரிய சாதனையாளர்களாக உருவாக்கவும் நடிகர் அஜீத்குமார் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இதுவரை அஜீத்குமார் ரேஸிங் கம்பெனியில் 60 பேர் வரை இணைந்துள்ளனர்.

- Advertisement -

அவர்கள் வெளிநாடுகளில் நடக்கும் கார் போட்டிகளில் பங்கேற்க போக்குவரத்து செலவு தங்குமிடம் உள்ளிட்ட பல தேவைகளை வசதிகளை அஜீத்குமாரின் கார் ரேஸிங் கம்பெனிதான் செய்து தருகிறது. அவர்கள் மூலமாக கார் ரேஸில் பெரிய வெற்றிகளை சாதனைகளை படைக்க நடிகர் அஜீத்குமார் முடிவு செய்திருக்கிறார்.

அதனால்தான் நடிகர் அஜீத்குமார் சமீபகாலமாக தனது சம்பளத்தை உயர்த்திக்கொண்டே வருகிறார். இப்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 186 கோடி வரை சம்பளம் கேட்கிறார். நடிப்பில் வரும் பெரிய வருமானத்தை வைத்து கார் ரேஸில் பெரிய சாதனை நாயகனாக வலம் வருவதே அஜீத்குமாரின் திட்டமாக உள்ளது. அதனால் கார் ரேஸிலும் அஜீத்குமார் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதே அவரது நலம் விரும்பிகளில் எண்ணமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்