- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை… காரணம் அதுதானாம் - பதிலடியாக...

நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை… காரணம் அதுதானாம் – பதிலடியாக கேப்டன் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல அழகான நடிகைகள் முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். ஆந்திரா கேரளா கர்நாடகா என பிற மாநிலங்களை சேர்ந்த பல நடிகைகள் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பெரிய அளவில் வரவேற்பை அங்கீகாரத்தை தமிழ் ரசிகர்களிடம் பெற்றிருக்கின்றனர். குறிப்பாக மும்பை நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நதியா. கடந்த 1980 90ம் ஆண்டுகளில் நடிகை நதியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர்கள் பிரபு சுரேஷ் மோகன் சத்யராஜ் கார்த்திக் ரகுமான் போன்ற அழகான சிவந்த தோற்றம் கொண்ட ஹீரோக்களுடன் மட்டுமே நடித்தார்.

- Advertisement -

நடிகை நதியாவை பொருத்த வரை கருப்பான உருவத்தோற்றம் கொண்ட ஹீரோக்களுடன் நடிக்க அவர் விரும்ப மாட்டார் என்று கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்துடன் ராஜாதி ராஜா என்ற ஒரு படத்தில் மட்டுமே நடிகை நதியா நடித்திருந்தார். அதுவும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் என்பதாலும் ரஜினியை தவிர்ப்பதால், தமிழ் சினிமாவில் ரசிகர்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும் என்பதாலும் அந்த ஒரு படத்தில் மட்டுமே அவர் ரஜினியுடன் நடித்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் விஜயகாந்த் முரளி போன்றவர்கள் முன்னணி நடிகராக இருந்தாலும் கருப்பான தோற்றம் கொண்ட அவர்களுடன் நடிக்க நடிகை நதியாக சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சில நடிகைகள் குறிப்பிட்ட ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க மறுப்பதுண்டு. காரணம், கருப்பான அவர்களுடன் நடித்தால் தங்களது இமேஜ் போய்விடும் என்ற பாகுபாடு எண்ணம்தான் அதற்கு காரணம்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நடிகர் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் நடிகை நதியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அப்போது கருப்பான ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற ஒரு பாலிசி வைத்திருக்கிறேன். விஜயகாந்த் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் அவருடன் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று நடிகை நதியா கூறியிருக்கிறார். இந்த தகவல் நடிகர் விஜயகாந்த் கவனத்துக்கு வந்திருக்கிறது.

தன்னைப் போன்ற கருப்பான நடிகர்களை அவமானப்படுத்தும் விதமாக நதியா நடந்துக்கொண்டதால், அவருக்கு சரியான பதிலடி தரும் விதமாக மலையாளத்தில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகை ஷோபனாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் கேப்டன். அந்த படம்தான் பொன்மனச் செல்வன். நீ பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் இன்றும் வைரலாக டிரண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஷோபனா சிறந்த ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்