கடந்த 2024ம் ஆண்டில் வெளியாக மாபெரும் வெற்றியை பெற்ற படம் லப்பர் பந்து. இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் சச்சனா கிருஷ்ணமூர்த்தி சுவாசிகா காளி வெங்கட் டிஎஸ்கே தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பெற்ற படமாக இருந்தது.
குறிப்பாக இந்த படத்தில் யசோதா கேரக்டரில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்த நடித்த நடிகை சுவாசிகா பெரிய அளவில் கவனமும் வரவேற்பும் பெற்றார். தொடர்ந்து மாமன் படத்தில் சூரிக்கு அக்காவாக நடித்திருந்தார். கருப்பு படத்தில் வக்கீலாகவும் நூறு சாமி படத்தில் ஒரு முக்கியமான ரோலிலும் சுவாசிகா நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சுவாசிகா கூறியதாவது, தமிழ் சினிமாவில் கோரிப்பாளையம் வைகை என்ற 2 படங்களில் நடித்தும் நான் பெரிய அளவில் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகம் ஆகவில்லை. அப்புறம் மலையாளத்தில் எப்படியும் நடிப்பில் முன்னுக்கு வந்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
ஏனென்றால் மலையாள சினிமாவில் எனக்கு தெரிந்த இயக்குனர்கள் இருந்தார்கள். சொந்தமாக வீடும் அங்கு இருந்தது. தெரிந்த சொந்தக்காரங்க நண்பர்கள் இருந்தார்கள். அதனால் எப்படியும் மலையாள சினிமாவில் சாதித்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் நடிப்பை விட்டு விட்டு வெளியே போய்விடலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது இல்லை.
எனக்கு ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. டாக்டர் இன்ஜினியர் டீச்சர் என ஆகிற ஐடியாவும் இல்லை. ஏனென்றால் எனக்கு படிப்பில் சுத்தமாக இன்ஸ்ட்ரஸ்ட் இல்லை. என்னுடைய ஒரே நோக்கமாக இருந்தது சினிமா மட்டும்தான். சினிமாவில் சாதிக்க வேண்டும். பெயர் வாங்காமல் போகக் கூடாது என்ற எண்ணம் இருந்தது.
எனக்கு படித்து வேலைக்கு போக வேண்டும் என்ற யோசனையே இல்லை. படிப்பில் நான் அவ்வளவு மோசமாக இருந்தேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நடிப்பில் சாதிக்க வேண்டும். நடிகையாக ஜெயிக்க வேண்டும். அப்படி ஒருவேளை ஜெயிக்க முடியாமல் போய்விட்டால் கிளாசிக்கல் டான்ஸ் அதில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது என்று நடிகை சுவாசிகா அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





