- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கழுத்தில் போட்டிருக்கும் மாலை யாருடையது தெரியுமா? இட்லி கடை என ஏன் டைட்டில் வைச்சேன்?...

நான் கழுத்தில் போட்டிருக்கும் மாலை யாருடையது தெரியுமா? இட்லி கடை என ஏன் டைட்டில் வைச்சேன்? – வெளிப்படையாக பேசிய நடிகர் தனுஷ்!

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். நடிகர் தனுஷ் நீண்ட நாட்களாக கழுத்தில் கருங்காலி மாலை அணிந்திருக்கிறார்.

இதுகுறித்து விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, உண்மையில் நான் கழுத்தில் அணிந்திருக்கும் மாலை என்ன மாலை என்று எனக்கு தெரியாது. என் பாட்டி வீட்டுக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டு ஊரில் போய் பார்த்தேன். அப்போது என் தாத்தா போட்டோவில் இந்த மாலை மாட்டி இருந்தது.அதை பார்த்தவுடன் எனக்கு அதை தர முடியுமா என்று பாட்டியிடம் கேட்டேன்.

- Advertisement -

இது சாதாரண மாலை அல்ல. அவர் 40 ஆண்டுகள் போட்டிருந்த மாலை. அதுவும் நிறைய பக்தியுடன் தினமும் மந்திரங்கள் சொல்லி போட்டு இருந்த மாலை என்று பாட்டி சொன்னார். நான் கேட்டவுடன் நேராக என் தாத்தா போட்டோ முன்னால் போய் பாட்டி நின்று பேசினார். நமக்கு எத்தனையோ பேரப் பிள்ளைகள் இருந்தாலும் இவன்தான் இந்த மாலை அருமை உணர்ந்து கேட்கிறான். அதனால் கொடுக்கிறேன் என்றார்.

அது கைக்கு வந்த பின் எனக்கு தனி உற்சாகம். கருங்காலி மாலை அதைச் செய்யும் இதைச் செய்யும் என்றார்கள். உண்மையில் என்னை ஒன்றும் செய்யாது. ஏனெனில் இது என் தாத்தா மாலை. எப்பவும் என்னை பற்றி நான் பெருமையாக பேசமாட்டேன். ஆனால் நான் நல்ல தகப்பன். இந்த 42 வயதில் இன்னும் சாதிக்க ஆசைப்படுகிறேன்.

- Advertisement -

அதனால் என் பயோபிக் படம் பற்றி யோசிக்கவில்லை. நான் தேசிய விருது வாங்கி விட்டேன். ஹாலிவுட் படத்தில் நடித்து விட்டேன். ஆஸ்கர் விருது பற்றி கேட்கிறார்கள். அது என் தலையில் இருப்பது போல நடக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே நேரத்தில் நான் இந்த படத்துக்கு இட்லி கடை என்று பெயர் வைத்தது ஏன் என்று பலரும் ஆச்சரியமாக கேட்கின்றனர்.

எங்கள் கிராமத்திலும் சென்னையிலும் நான் சந்தித்த மற்றும் என்னை பாதித்த கதாபாத்திரங்களை வைத்து கற்பனையாக உருவாக்கியதுதான் இந்த இட்லி கடை படம். இன்னும் பவர்ஃபுல்லான டைட்டில் வைத்திருக்கலாமே என்று சிலர் கேட்கலாம். ஒரு சில படங்களில் ஹீரோ பெயரையே டைட்டிலாக வைப்பார்கள். இந்த படத்துக்கு இட்லி கடை தான் ஹீரோ என்று நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்