- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாடா… ஒரு வழியாக வந்தாச்சு, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்ட்டில் மதராஸி… சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம்!

அப்பாடா… ஒரு வழியாக வந்தாச்சு, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்ட்டில் மதராஸி… சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூல் என்பது இன்னும் நிறைவேறாத கனவாகவே இருந்து வருகிறது. இதுவரை எந்த நட்சத்திர நடிகர் நடித்த படமும் ரூ. 1000 கோடி என்ற இலக்கை தொடவில்லை. ஆனால் தெலுங்கு கன்னடம் இந்தி படங்கள் தொடர்ந்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி வருகின்றன. கடந்த டிசம்பரில் வெளியான புஷ்பா 2 1800 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் எப்படியும் 1000 கோடி ரூபாய் வசூலை தட்டி தூக்கி விடும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு காட்டு மொக்கை படத்தை எடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொதப்பி விட்டார். ஒரு சாதாரண படம் அளவுக்கு கூட கூலி படம் ரசிகர்களை கவரவில்லை.

- Advertisement -

கடந்த ஆண்டில் 241 திரைப்படங்கள் தமிழில் வெளிவந்த நிலையில் இதில் வெற்றிப்படங்களாக இருந்தது வெறும் 20 படங்கள்தான். அதிலும் 100 கோடி ரூபாய் வசூலித்தது வெறும் 8 படங்கள்தான். இந்த சூழலில் எங்கே தமிழ் சினிமா 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என தமிழ் ரசிகர்கள் விரக்தியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் தமிழ் படங்களின் தரம் வெகுவாக குறைந்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான அமரன் படம் ரூ. 325 கோடி வசூலித்தது. இந்த படத்துக்கு பிறகுதான் சிவகார்த்திகேயன் நட்சத்திர அந்தஸ்து மேலும் பலமடங்கு உயர்ந்தது. அவரது சம்பளமும் ரூ. 70 கோடிக்கு எகிறி விட்டது. அவரது நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

- Advertisement -

அமரன் படத்துக்கு பின் கடந்த 5ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வெளியானது. ஆனால் இது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. அதனால் டிக்கெட் முன்பதிவும் மிக மந்தமாகவே இருந்தது. ரிலீஸ் நாளில் கூட பல திரையரங்குகளில் ரசிகர் கூட்டத்தையே காண முடியவில்லை.

மதராஸி படம் சுமார் ரகம்தான். துப்பாக்கி கஜினி படத்தின் கலவையாக சண்டை படமாக ரசிகர்களை கவர்ந்தது. மற்றபடி ஆஹா ஓஹோ என்றும் மெச்சும்படியாக இந்த படத்தை தர ஏஆர் முருகதாஸ் தவறிவிட்டார். எனினும் இந்த படம் இப்போது உலகளவில் ரூ. 100 கோடி வசூலை கடந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்து விட்டது. இது ரூ. 100 கோடி வசூலித்த எஸ்கே படங்களில் 4வது படமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்