நடிகர் கமல்ஹாசன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர்தான். சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும் பலகட்டங்களில் பலவிதமான விமர்சனங்களை கமல்ஹாசன் சந்தித்துக்கொண்டே இருக்கிறார். இப்போதும் கூட தக்லைப் படத்தில் ரங்கராஜ் சக்திவேல் நாயக்கர் என்பதில் கூட ஜாதி பிரச்னை இருக்கிறது.
வாணி கணபதி, சரிகா என்ற இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி மனைவியாக வாழ்ந்த கமல், நடிகை கவுதமியுடன் 17 ஆண்டுகள், தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்தினார். பிறகு, கவுதமியை விட்டு விலகினார். இப்போது முரட்டு சிங்கிளாக அவர் காட்டிக் கொண்டாலும், நடிகை பூஜாகுமார் கமலுடன் தொடர்பில் இருக்கிறார்.
நடிகை ஸ்ரீ வித்யாவுடன் ஆரம்ப கட்டத்திலும் அதற்கு பிறகு நடிகை சிம்ரனுடன் சில காலமும் கமல் காதல்வயப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கமலை விட ஸ்ரீ வித்யா 2 வயது மூத்தவர், சிம்ரனை விட கமல் 22 வயது மூத்தவர் என்பதாலும் அவர்களது உறவுகளில் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடுவராக வந்து வாராவாரம் பஞ்சாயத்து நடத்திக் கொண்டு இருக்கும் கமல், அங்கிருந்த போட்டியாளர் பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதே போல், தனது பிறந்த நாள் விழாவில் ரசிகர்களை அருகில் விடாமல், டேபிள்களுக்கு நடுவில் பாதுகாப்பாக தள்ளி நின்று கொண்டு ரசிகர்களை கமல் அசிங்கப்படுத்தியதும் பேசு பொருளாகி விட்டது.
பல ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்த பாபா படப்பிடிப்பு நடந்தது,. அப்போது ஒரு சண்டைகாட்சி எடுக்கப்பட்டது. ரஜினிக்கு டூப்பாக நடித்த ஸ்டண்ட் நடிகருக்கு ரஜினி அணியும் அதே டிரஸ் இல்லை. ரஜினிக்கு மட்டுமே ஒரு டிரஸ் இருந்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற காட்சிகளை எடுக்கும்போது, இரண்டு அல்லது மூன்று எக்ஸ்ட்ரா டிரஸ் இருக்கும்படி உதவி இயக்குநர் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், உதவி இயக்குநரின் அஜாக்கிரதையால் கூடுதல் சட்டை இல்லாததால், படத்தின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா பயங்கர டென்ஷனாகி விட்டார். அந்த சூழ்நிலையை புரிந்துக்கொண்ட ரஜினி, தனது சட்டையை அந்த ஸ்டண்ட் நடிகருக்கு கொடுத்து, பிறகு அந்த ஸ்டண்ட் நடிகர் அணிந்து நடித்த சட்டையை தானும் அணிந்து நடித்துள்ளார். டூப் நடிகர் அணிந்த வியர்வையில் நனைந்த, கசங்கிய சட்டையை ரஜினி எந்தவித சங்கோஜமும் இன்றி அணிந்து நடித்து அந்த காட்சியை முடித்திருக்கிறார். இப்படி நடந்துக்கொண்ட சூப்பர் ஸ்டாரை பார்த்தாவது, உலக நாயகன் தன்னை திருத்திக்கொண்டால் நல்லது என்கின்றனர் சினிமா ரசிகர்கள்.





