- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா தயாரிப்பாளராக மகன் பட்ட கடன்… பாட்டு பாடி வட்டி கட்டிய பிரபலம் - சக...

சினிமா தயாரிப்பாளராக மகன் பட்ட கடன்… பாட்டு பாடி வட்டி கட்டிய பிரபலம் – சக பாடகர் போட்டுடைத்த ரகசியம்!

- Advertisement -

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி கின்னஸ் உலக சாதனை படைத்தவர். தனது தேன் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ் பி பி சரண் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் பாடகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

ரசிகா்களின் மனம் கவர்ந்த பாடகர் மனோ இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அவரது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக வசீகரித்தவர். எஸ்பிபி – மனோ இடையே ஒரு சகோதர பாசம் இருந்தது.பின்னணி பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ வட்டக்கானல் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

- Advertisement -

இதில் பங்கேற்ற பாடகர் மனோ, எஸ்பிபி குறித்து கூறியதாவது, என்னுடைய அண்ணன் எஸ்பிபி மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அவரிடம் பலமுறை பகிர்ந்து இருக்கிறேன். ஒருமுறை என்னுடைய மகன்களின் சினிமா ஆர்வம் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஒரு பையன் படம் பண்ண ஆசைப்படறான். இன்னொரு பையன் பாடகராக ஆசைப்படறான்னு சொன்னேன். அதுக்கு அவர், டேய் நம்ம ஆசைப்படுவது எல்லாம் நமக்கு நடந்தால் நாமதான் கடவுள். நம்மகிட்ட என்னென்ன இருக்கோ அதை வச்சு பசங்க முன்னேற வழி பண்ணு. அதுக்கு எடுத்துக்காட்டாக என்னையே எடுத்துக்கோ.

- Advertisement -

என் மகன் படம் தயாரித்து நஷ்டமானதால் அந்த கடனுக்கு நான் பாட்டு பாடி வட்டி கட்டி அடைத்தேன். அதனால அப்படி நீ போயிடாத. ஏன்னா நம்ம ஒவ்வொரு படியா கஷ்டப்பட்டு 45 வருஷம் டிராவல் பண்ணி வந்திருக்கோம்.
ஒரு பாட்டை நீ பாடினால்தான் காசு. உனக்கு சளி பிடிச்சிருக்குதுன்னு உன் பையனை பாட சொன்னால் ஒத்துக்க மாட்டாங்க.

அதனால ஒரு பாடகனுக்குரிய காசு மதிப்பு மிக்கது என்று எஸ்பிபி அண்ணன் எனக்கு அறிவுரை சொன்னார் என்று பாடகர் மனோ, பாடகர் எஸ்பிபி குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். தனது மகன் எஸ்பிபி சரண் திரைப்படத் தயாரிப்பில் நஷ்டம் அடைந்தபோது அந்த கடனை அடைப்பதற்காக எஸ்பிபி பல படங்களில் பாட்டு பாடி வட்டி கட்டி இருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்