கடந்த 2009ம் ஆண்டில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தில் ஜீவா ஹீரோவாகவும், அனுயா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். ஜீவாவின் நண்பனாக சந்தானம் நடித்திருந்தார். மேலும் ஊர்வசி கு ஞானசம்பந்தம் சத்யன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இளம் காதலர்களை மையப்படுத்திய இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக சந்தானம் காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. சந்தானம் நடித்த ஆரம்பகால காமெடி ரோல் படங்களில் இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் இப்போது இயக்குனர் எம் ராஜேஷ் நடிகர் ஜீவாவை வைத்து புதிய படம் ஒன்றை டைரக்ட் செய்கிறார். முதலில் இந்த படம் ஏற்கனவே வெளிவந்த சிவா மனசுல சக்தி படத்தின் 2ம் பாகமாக உருவாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் இது சிவா மனசுல சக்தி படத்தின் 2ம் பாகம் அல்ல, இது முற்றிலும் புதிய கதையில் உருவாகும் படம் என்று இப்போது கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. நடிகர் சந்தானம் இப்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் காமெடி ரோலில் நடிப்பது என்றால் ஹீரோவுக்கு இணையாக படம் முழுவதும் வருவது போல் தனது காட்சிகள் இருக்க வேண்டும் என்றும் மேலும் கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் தனது கேரக்டரில் இருக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போடுகிறார்.
மேலும் அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவரது சம்பளம் 15 கோடி என்பதால் காமெடி ரோலில் நடித்தாலும் அதே 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். அதனால் இந்த படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜீவா நடிக்கும் இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் ஏற்கனவே 2 பாடல்களை இசையமைத்துக் கொடுத்துவிட்டார்.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. குறுகிய காலத்தில் இந்த படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் எம் ராஜேஷ் மற்றும் ஜீவா ஆகிய இருவருக்குமே ஒரு வெற்றிப்படம் இப்போது தேவை என்பதால் இந்த படத்தை ஒரு சிறப்பான படமாக கொடுக்க பணிகளை துவங்கியுள்ளனர். அதே நேரத்தில் சந்தானம் போட்ட கண்டிஷன்களால் இந்த படம் சிவா மனசுல சக்தி 2ம் பாகமாக உருவாகவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





