- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது அம்மாவின் பெயரில் மீண்டும் ஒரு திட்டம், நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த தரமான...

தனது அம்மாவின் பெயரில் மீண்டும் ஒரு திட்டம், நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த தரமான சம்பவம் – குவியும் மக்கள் பாராட்டு!

- Advertisement -

தொழில் ரீதியாக வியாபாரம் ரீதியாக கோடிக்கணக்கில் வருமானம் வந்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய மனம் பெரும்பாலானவர்களுக்கு வருவதே இல்லை. அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளி கொடுக்கும் ஒரு எண்ணம் கூட இல்லாமல் பலரும் குறுகிய மனம் கொண்டவர்களாக தான் இருக்கின்றனர். ஆனால் விதிவிலக்காக சிலர், மற்றவர்களுக்கு உதவுவதையே தங்களது வாழ்க்கை லட்சியமாக கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடனக்குழுவில் ஒருவராக ஆடிக்கொண்டிருந்த அவர் ஒரு கட்டத்தில் நடன இயக்குனராக மாறினார். பிறகு நடிகராகனார். இப்போது இயக்குனர் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

காஞ்சனா 4 மற்றும் பென்ஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவி, உணவு, வசதியற்ற மக்களுக்கு மருத்துவ உதவி என செய்கிறார். மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கி பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் தனது வீட்டை இலவச பள்ளியாக மாற்றி தந்திருக்கிறார்.

இந்நிலையில் இப்போது அடுத்தகட்டமாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மா பெயரில் கண்மணி அன்னதான விருந்து என்னும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது, பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும் உயர்தர அறுசுவை உணவை ஏழை குழந்தைகளும் சாப்பிட வேண்டும். பசியில் யாரும் வாடக்கூடாது என்ற நோக்கத்தில் என் அன்னையின் பெயரில் கண்மணி அன்னதான விருந்து திட்டத்தை தொடங்கி இருக்கின்றேன்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் என் வீட்டில் 60 குழந்தைகளுக்கு உணவளித்தேன். இப்போது எங்கெல்லாம் பசியால் எளியோர் வாடுகிறார்களோ அவர்களை தேடிக் கண்டு எனது கைகளால் உணவளிக்கும் வகையில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளேன். இதை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி.

யாரும் பசியால் வாடக்கூடாது. அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்த திட்டத்தை மன நிறைவுடன் எப்போதும் தொடர்வேன் என்று மாஸ்டர் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார். இந்த திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் சாதம் சிக்கன் மட்டன் மீன் முட்டை என அறுசுவை உணவை தனது கையால் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் மக்களுக்கு பரிமாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்