- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழா; மறைந்த 2 திரைபிரபலங்களை பற்றிப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் -...

இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழா; மறைந்த 2 திரைபிரபலங்களை பற்றிப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் – அவர்களை மறக்க முடியுமா?

- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் இளையராஜா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவில் இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றமும் இசை நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, புராணங்களில் இதிகாசங்களில் அதிசய மனிதர்களை பற்றி நான் கேள்வி பட்டுள்ளேன். ஆனால் நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா. அவரைப் பற்றி நிறைய பேசலாம்.

- Advertisement -

கடந்த 1970, 80ம் ஆண்டுகளில் அவர் போட்ட பாடல்களை இப்போது படங்களில் பயன்படுத்தினாலும் அந்த படங்கள் பெரிய ஹிட் ஆகிவிடும். கூலி படத்தில் கூட அவரது 2 பாடல்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான பாடல்களை இளையராஜா இசையமைத்து உருவாக்கி இருக்கிறார். பல நூறு பாடல்களை அவரே எழுதி பாடியும் இருக்கிறார். இசைத்துறையில் 50 ஆண்டுகால வெற்றிப் பயணம் என்பது சாதாரண விஷயம் அல்ல.

கிராமங்களில் நெல்குவியலை ஒருவன் அள்ளிக் கொடுப்பான். அருகில் இருக்கும் ஒருவன் அந்த நெல்லை தள்ளிக் கொடுப்பான். அள்ளிக் கொடுப்பவனுக்கு தள்ளிக் கொடுப்பவன் தெரியாது. அதைப்போல ராகதேவி இந்த ராகதேவனுக்கு தள்ளிக் கொடுப்பார். இந்த ராகதேவன் ஹார்மோனியத்தில் அள்ளிக் கொடுக்கிறார்.

- Advertisement -

அனைவருக்கும் ஒரே மாதிரியான இசையை தான் தருகிறேன் என்கிறார் இளையராஜா. ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் ராமராஜன் மோகன் முரளி என பலருக்கு இசையமைத்தாலும் கமல்ஹாசனுக்கு மட்டும் இளையராஜா கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனம் கொடுப்பார். இதை ஏற்கனவே ஒரு முறை நான் கூறியிருக்கிறேன். இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலும் பதிவு செய்கிறேன்.

எஸ்பி பாலசுப்ரமணியம், நடிகர் விவேக் ஆகியோர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது சகோதரர் பாஸ்கர் மனைவி ஜீவா மகள் பவதாரணி ஆகியோர் மறைந்த போது கண்ணீர் சிந்தாத இளையராஜா, எஸ்பிபி கொரோனா காலகட்டத்தில் மறைந்த போது தனது நண்பனுக்காக கண்ணீர் சிந்தினார். நீதி நியாயம் உண்மையோடு உழைத்தால் அனைத்தும் உன்னை தேடி வரும் என்பதற்கு உதாரணமாக உழைத்துக் கொண்டே இருக்கிறார் இளையராஜா. அதனால் தான் அவரை வெற்றிகள் தேடி வருகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்