- Advertisement -
Homeபொழுதுபோக்குநெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மீண்டும் குட் பேட் அக்லி படம்… என்னங்க இப்படி பண்ணிட்டாங்க என்று...

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மீண்டும் குட் பேட் அக்லி படம்… என்னங்க இப்படி பண்ணிட்டாங்க என்று புலம்பும் அஜீத்குமார் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். திரிஷா அர்ஜூன்தாஸ் பிரியா வாரியர் சிம்ரன் பிரசன்னா பிரபு சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் உலகம் முழுவதும் மொத்தம் 230 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கு 70 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அஜீத்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களின் திருப்திக்காக இந்த படத்தின் கதை திரைக்கதை வசனங்கள் உருவாக்கப்பட்டு இருந்ததால், இது பேஃன் பாய் படமாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்திருந்தார் என்றும் பேசப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் ஆதிக் ரவிச்சந்திரன் மிக தீவிரமாக அஜீத்குமார் ரசிகர். அதனால் இந்த படத்தில் தீனா வரலாறு அமர்க்களம் சிட்டிசன் வாலி போன்ற படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகள் அதிகமாக இருந்தன. மேலும் இந்த படத்தில் இளையராஜா இசையில் உருவான என் ஜோடி மஞ்சக்குருவி மற்றும் ஒத்த ரூவா தாரேன், இளமை இதோ இதோ போன்ற பாடல்களும் பயன்படுத்தப்பட்டு இருந்தன.

இதையடுத்து தனது அனுமதியின்றி தன்னுடைய இசையில் உருவான பாடல்களை பயன்படுத்தியதாக குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தார். பலகட்டமாக இதுகுறித்து வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில், அந்த படத்தில் வரும் 3 பாடல்களையும் நீக்கி விட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

- Advertisement -

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்த குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து அந்த பாடல்கள் இருந்ததால், இளையராஜா தரப்பில் கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. அதன்பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட்பேட் அக்லி படத்தையே நீக்கி விட்டனர். மேலும் இதற்காக ரூ. 80 கோடி வரை திருப்பித் தர படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளருக்கு நெட்பிளிக்ஸ் நெருக்கடி தந்துள்ளது.

இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இப்போது மீண்டும் குட் பேட் அக்லி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்த 3 பாடல்கள் இடம்பெற்ற காட்சிகளில், அந்த பாடல்களுக்கு பதிலாக புதிய பிஜிஎம் இசை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அது சிறிதும் படத்துக்கு பொருத்தமாக இல்லை என்று ஏகே ரசிகர்கள் புலம்புகின்றனர். அஜீத்குமார் நடித்த வேறு இசையமைப்பாளர்களின் பழைய பாடல்களை அந்த இடங்களில் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்