- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் ரிலீஸ் தேதி உறுதி… எல்லாமே அட்ஜஸ்ட்மென்ட் தான்- ஆனா...

நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் ரிலீஸ் தேதி உறுதி… எல்லாமே அட்ஜஸ்ட்மென்ட் தான்- ஆனா யார் முன்னாடி வருவாங்கன்னு தான் தெரியலே…

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் கருப்பு. இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கடவுள் வேடத்திலும் வக்கீல் வேடத்திலும் நடித்துள்ள இந்த படம் அய்யனார் சாமி கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. திரிஷா சுவாசிகா ஷிவதா நட்டி நடராஜ் யோகிபாபு மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பெரிய எதிர்பார்ப்பில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் கருப்பு படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிஜிட்டல் வியாபாரம் இன்னும் ஆகாததால் அடுத்த ஆண்டுக்கு ரிலீஸ் தள்ளிப் போனது. தனது அண்ணன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகட்டும் என்று தம்பி கார்த்தி, அவர் நடித்த சர்தார் 2 படத்தை கூட தீபாவளிக்கு ரிலீஸ் செய்யாமல் தள்ளி வைத்திருந்தார்.

- Advertisement -

டிஜிட்டல் வியாபாரமின்றி தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியாமல் கருப்பு படம் தள்ளி போய்விட்டது. அடுத்த பொங்கலுக்கு கருப்பு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில் விஜய் நடித்த ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி என 2 பெரிய படங்கள் வருகின்றன. இதற்கிடையே சிக்கினால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கும் என்பதால் மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போனது.

இப்போது வருகிற ஏப்ரல் 14ம் தேதி கருப்பு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. ஆனால் அப்போதும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஏனெனில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ஜெயிலர் 2 படம் பொங்கலுக்கு தான் ரிலீஸாகிறது. அதனால் ரஜினி படத்துடன் சூர்யா படம் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் வேறு வழியில்லை. இன்னும் படம் ரிலீஸை தள்ளிப் போட முடியாத நெருக்கடி நடிகர் சூர்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இப்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்து வரும் சூர்யா 46 படத்தை வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் ஏப்ரல் 14ம் தேதி கருப்பு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே ரஜினி படத்துக்கும் சூர்யா படத்துக்கும் ஒரு அட்ஜஸ்ட்மென்ட் செய்யப்பட்டுள்ளது. அதாவது வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகும் ஜனநாயகன் 14ம் தேதியும், பராசக்தி 9ம் தேதியும் ரிலீஸாக உள்ளது. அதே போல் 9ம் தேதி 14ம் தேதி என 2 படங்களை 4 நாட்கள் இடைவெளியில் ரிலீஸ் செய்ய முடிவாகி உள்ளது. இதில் 9ம் தேதி ரிலீஸாவது ஜெயிலர் 2 படமா அல்லது கருப்பு படமா என்பதில்தான் சஸ்பென்ஸ் இப்போது நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்