- Advertisement -
Homeபொழுதுபோக்குகும்கி 2 மற்றும் பையா 2 படங்கள் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் - படத்தின்...

கும்கி 2 மற்றும் பையா 2 படங்கள் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – படத்தின் ஹீரோக்கள் அவர்களா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் கும்கி. நடிகர் பிரபுவின் மகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு இந்த படத்தில்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். சுந்தரபாண்டியன் படத்தை தொடர்ந்து லட்சுமிமேனன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இப்போது கும்கி 2 படத்தை இயக்குனர் பிரபு சாலமன் உருவாக்க தயாராகி விட்டார். சமீபத்தில் இந்த படத்தின் டீசரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். படக்குழு தரப்பில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றது.

- Advertisement -

கும்கி 2 படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கவில்லை. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் அர்ஜூன் தாஸ் நடிக்கிறார். கதாநாயகனாக புதுமுக நாயகன் மதி என்பவர் நடிக்கிறார். இவர் இயக்குனர் லிங்குசாமியின் பெரிய அண்ணனின் மாப்பிள்ளை என்று சொல்லப்படுகிறது.

அதே போல் கார்த்தி தமன்னா நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் பையா. இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி டைரக்ட் செய்திருந்தார். இந்த படமும் இப்போது பையா 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை டைரக்டர் லிங்குசாமிதான் டைரக்ட் செய்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

- Advertisement -

கார்த்தி தமன்னா நடித்த பையா படத்தில் காதல் மற்றும் ஆக்சன் காட்சிகள் என இரண்டும் மாறி மாறி படத்தில் இருக்கும். அதாவது படம் முழுவதும் பல இடங்களில் சண்டை காட்சிகள் வரும். ஆனால் பையா 2 படத்தில் ஆக்சன் காட்சிகளை குறைத்து ரொமாண்டிக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பையா 2 படத்தில் கார்த்தி தமன்னா நடிக்கவில்லை. இந்த படத்திலும் புதுமுக நடிகர் அறிமுகமாகிறார். அவர் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்த்தன் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரின் மகன் சினிமாவில் புதிய ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படமும் விரைவில் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

- Advertisement -

சற்று முன்