நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இயக்கிய இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த சில வாரங்களாக இட்லி கடை படத்தின் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மாஸ் ஹிட் கொடுக்காததால் எப்படியாவது இட்லி கடை ஒரு மாஸ் ஹிட் ஆக வேண்டும் என்ற முனைப்போடு நடிகர் தனுஷ் இருந்து வருகிறார்.
இட்லி கடை படம் ரிலீஸாக 2 தினங்களே இருப்பதால் சென்னை கோவை மதுரை திருச்சி என நடிகர் தனுஷ் தொடர்ந்து இட்லி கடை படம் பிரமோசன்களில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்து ஐதராபாத்தில் இட்லி கடை பிரமோஷன் நிகழ்ச்சி நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நடிகர் தனுஷ் இளம்வயதில் தானும் தனது குடும்பமும் பட்ட கஷ்டங்களை குறிப்பாக கடந்த காலத்தில் சந்தித்த வறுமை நிலை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இதுவரை எந்த படத்துக்காகவும் அவர் இந்தளவுக்கு வெளிப்படையாக தனது குடும்ப விஷயங்களை பகிரங்கமாக பேசியது இல்லை.
இந்நிலையில் இட்லி கடை படத்தில் இளம் வயது தனுஷாக நடித்த சிறுவனின் தாயார் மதுரையில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் குறித்து பேசினார். அப்போது அவர், என் உயிர் இருக்கும் வரை உங்களை நினைத்திருப்பேன். எனது மகன் வயிற்றில் இருக்கும் போது இருந்தே உங்களை நினைத்து தான் பெற்றெடுத்தேன்.
அதனால் தான் அவன் உங்களைப் போலவே இருக்கிறான். நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனுஷூக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று சொல்லித்தான் அவனை வளர்த்து இருக்கிறேன் என்று மிகவும் உணர்ச்சிக்கரமாக பேசினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், தனுஷ் அவர்களே… இட்லி கடை படத்தை எல்லோரும் பார்த்து ஹிட் ஆக்கிடறோம். தயவுசெய்து இந்த ஃப்ரீ ரிலீஸ் சென்டிமெண்ட் பர்பாஃமென்ஸ் நிறுத்திடுங்க. இதுக்கு மேல உணர்ச்சி வசப்பட்டா எங்க பாடி தாங்காது. இவங்க கணவர் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்குமோ பாவம் என்று குறிப்பிட்டு கலாய்த்து இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி உள்ளது.





