- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா 43வது படத்தில் இடம்பெறும் பிரபல நடிகரின் மனைவி... எல்லையில்லா மகிழ்ச்சியில் ரசிகர்கள்... சுதா கொங்கராவின்...

சூர்யா 43வது படத்தில் இடம்பெறும் பிரபல நடிகரின் மனைவி… எல்லையில்லா மகிழ்ச்சியில் ரசிகர்கள்… சுதா கொங்கராவின் சூப்பர் ப்ளான்…

- Advertisement -

சூரரை போற்று, ஜெய் பீம் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதன்பிறகு தனது ஆசான் பாலாவுடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் நடித்தார் சூர்யா. கன்னியாகுமரியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஆனால் ஷூட்டிங்கின் போது இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் வணங்கான் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இதையடுத்து சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க செல்ல, அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வருகிறார் பாலா. இந்த பக்கம், சிறுத்தை சிவாவுடனான படப்பிடிப்பு வேகம் எடுத்தது.

- Advertisement -

கங்குவா என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங், கொடைக்கானலின் அடர்ந்த வனப்பகுதியில் நடைபெற்றது. ஸ்டூடியோ க்ரீன் மற்றும் யுவி கிரீயேசன்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாகிறது. இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதுபோக, யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதி பாபு, நட்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

முன்ஜென்மத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கங்குவாவிற்காக சூர்யா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் இறுதியில் நலமா என சூர்யா கூறியது, அவரது ரசிகர்களை புல்லரிக்க செய்தது.

- Advertisement -

இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா இணைவார் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், திடீரென சுதா கொங்கராவுடன் கை கோர்த்தார் சூர்யா. இதில் சூர்யாவுக்கு தம்பியாக துல்கர் சல்மான் நடிப்பதாகவும், பிரியங்கா மோகன் படத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. தற்போது புதிய தகவலாக மலையாள நடிகை நஸ்ரியா, சூர்யா 43 படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழில் நேரம், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ், நையாண்டி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நஸ்ரியா, திடீரென நடிகர் பகத் பாஸிலை திருமணம் செய்தார். அதன்பிறகு நடிக்க வராமல் இருந்த அவர், மலையாளத்தில் சில படங்களில் தோன்றினார். இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு நஸ்ரியா தமிழ் படத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்