- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூரில் நடந்த துயர சம்பவம்… தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ...

கரூரில் நடந்த துயர சம்பவம்… தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ – விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என ஆறுதல்!

- Advertisement -

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 27ம் தேதி நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது. தவெக தலைவர் மீதும் திமுக அரசு மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சற்று நேரத்துக்கு முன் நடிகர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இந்த மாதிரியான ஒரு வலி நிறைந்த தருணத்தை நான் சந்தித்ததே கிடையாது. மனசு முழுக்க வலி. வலி மட்டும்தான். இந்த சுற்றுப்பயணத்துல என்னை இந்த மக்கள் பார்க்க வர்றாங்க. அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அவங்க என் மேல வச்சிருக்கிற அன்பும் பாசமும்.

- Advertisement -

அவங்க காட்டற அன்புக்கும் பாசத்துக்கும் நான் எப்பவும் கடமைப்பட்டு இருக்கிறேன். அதனால்தான் இந்த சுற்றுப்பயணத்துல நடந்த எல்லா விஷயங்களையும் தாண்டி மக்களுடைய பாதுகாப்பு அதில் எந்த காம்பரமைஸூம் பண்ணிடக் கூடாதுங்கறதுக்காக தான் என் மனசுல ஆழமா இந்த எண்ணம் இருந்தது.

அதனால்தான் இந்த அரசியல் காரணங்களை எல்லாம் தவிர்த்துட்டு ஒதுக்கி வெச்சிட்டு மக்களுடைய பாதுகாப்பை மட்டும் மைண்டுல வெச்சுக்கிட்டு அதற்கான இடங்களை தேர்வு செய்து அதற்கான இடங்களில் பர்மிஷன் கேட்கறது. போலீஸ் டிபார்ட்மென்டுல நாங்க ரெக்வெஸ்ட் பண்ணி கேட்போம். ஆனா நடக்க கூடாதது நடந்துருச்சு. நானும் மனுஷன்தானே? அத்தனை பேர் அங்க பாதிக்கப்பட்டுட்டு இருக்கும் போது உடனே அந்த ஊரை விட்டுட்டு என்னால கிளம்பி வர முடியலே.

- Advertisement -

திரும்பவும் நான் அங்கே போகணும் என்றால் அதை ஒரு காரணம் காட்டி இன்னும் பதட்டமான சூழ்நிலைகள், இன்னும் சில அசம்பாவிதங்கள் என அந்த மாதிரி எதாவது நடந்துட கூடாது என்பதற்காக தான் நான் அதை அவாய்டு செய்தேன். இந்த நேரத்துல சொந்தங்களை இழந்து தவிக்கிற அத்தனை குடும்பங்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்ன சொன்னாலும் அது ஈடாகாது என்று எனக்குத் தெரியும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிற அனைவருமே சீக்கிரமாக குணமடைந்து வரவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் வேண்டிக்கிறேன். கூடிய சீக்கிரமே நான் உங்களை எல்லாம் வந்து நான் சந்திக்கிறேன் என்று அந்த வீடியோவில் நடிகர் விஜய் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்