- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் பசங்க 2 பேருமே ஒரு பைசா கூட எனக்கு தர மாட்டாங்க -...

என் பசங்க 2 பேருமே ஒரு பைசா கூட எனக்கு தர மாட்டாங்க – வெளிப்படையாக பேசிய இயக்குனர் கஸ்தூரி ராஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. குறிப்பாக இவரது கிராமத்து படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை. எட்டுப்பட்டி ராசா என் ராசாவின் மனசிலே கரிசக்காட்டு பூவே என் ஆச ராசாவே என பல படங்கள் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பெரிய வெற்றியை பெற்ற படங்களாகும்.

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள் செல்வராகவன் தனுஷ் இருவருமே தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் நேற்று வெளியான நிலையில் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. செல்வராகவனும் தொடர்ந்து படங்களில் நடிப்பதோடு இயக்கத்திலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது, தனுஷ் சினிமாவுக்கு வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. காலேஜ் செகன்ட் இயர் படித்த போது ஒரு நாள், நான் சினிமாவுக்கு போய் விடுகிறேன் என்றார். நீ காலேஜை முடி. டிகிரி வாங்கு அது ரொம்ப முக்கியம். அப்புறம் நடிக்க போகலாம் என்று சொன்னேன். மறு பேச்சு இல்லாமல் காலேஜை முடித்து டிகிரி வாங்கி விட்டார்.

நான் ஆண் பிள்ளைகளிடம் ரொம்பவும் கண்டிப்பா இருப்பேன். பசங்களை அடித்து விடுவேன். மகள்களை அடிக்க மாட்டேன். செல்வாதான் நிறைய அடி வாங்குவான். அவன் செய்வதும் அப்படிதான் இருக்கும். கேங் லீடரே அவன்தான். பசங்களுக்கு அவங்க அம்மா வைதான் ரொம்ப பிடிக்கும். என் மீது மகள்கள் அதிக அன்பாக ஆதரவாக இருப்பார்கள்.

- Advertisement -

நல்லது கெட்டது எது என்றாலும் தனுஷ் செல்வா இருவருமே அம்மாவிடம்தான் சொல்வார்கள். என்னிடம் எதுவும் பேச மாட்டார்கள். பண விஷயத்தில் எதை நான் செய்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். நான் கோடிக்கணக்கில் பட்ட கடனை என் மகன்கள் அடைத்திருக்கின்றனர். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீஸின் போது 35 லட்சம் ரூபாய் நான் தரவேண்டிய கடனை தனுஷ் கொடுத்தார். ஏன் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.

அதே நேரத்தில் சொந்த செலவுக்கு எவ்வளவு பணம் என்றாலும் தாராளமாக கொடுப்பார்கள். ஓட்டல் செலவை கூட நான் தருவதில்லை. அதே நேரத்தில் சினிமா தயாரிப்பு என்றால் ஒரு பைசா கூட எனக்கு தர மாட்டார்கள். இட்லி கடை விழாவில் தனுஷ் பாட்டன் பூட்டன் குலசாமி வழிபாடு என்றெல்லாம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பூட்டன் என்றெல்லாம் பேசுகிறானே என ஆச்சரியப்பட்டேன். எல்லாம் அவனுக்கு கற்றுத் தந்தது அவன் அம்மா வளர்ப்புதான் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறினார்.

- Advertisement -

சற்று முன்