- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனிமேல் உன்னை வெச்சு படம் எடுக்க மாட்டேன், கழுத்தில் மாலையை போட்டு நடிகர் கமலிடம் கோபமாக...

இனிமேல் உன்னை வெச்சு படம் எடுக்க மாட்டேன், கழுத்தில் மாலையை போட்டு நடிகர் கமலிடம் கோபமாக சொன்ன இயக்குனர் – உண்மையை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த் இருவருமே உச்சம் தொட்ட நட்சத்திரங்கள். கலைத்துறையில் அவர்கள் இருவருமே மற்ற நடிகர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிய சாதனைகளை எல்லாம் செய்து காட்டி விட்டனர். அதனால் இனி அவர்கள் இருவரும் நடித்து சாதிக்க வேண்டியது பெரியதாக ஒன்றும் இல்லை.

அதிலும் கமல்ஹாசன் ஒரு திரைப்பட கலைஞராக தொழில்நுட்ப கலைஞராக தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்று கலைஞானி என்றும் உலக நாயகன் என்றும் புகழ் பெற்றவர். 70 வயதுகளை கடந்தும் இப்போதும் கூட தமிழ் சினிமாவின் பிரகாசமான எதிர்காலம் குறித்து யோசித்துக்கொண்டே இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

ரஜினி கமல் இருவருக்குமே குருநாதர் யார் என்றால் இயக்குனர் கே பாலசந்தர்தான். அவர்தான் ஆரம்ப காலத்தில் ரஜினி கமல் இருவருமே தமிழ் சினிமாவில் வளரும் கலைஞர்களாக இளைஞர்களாக இருந்த நிலையில் அவர்களை வைத்து படங்களை உருவாக்கி நல்ல ஒரு நிலைக்கு அவர்களை கொண்டு வந்தார்.

இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் சீதா ஜெமினி கணேசன் மனோரமா சார்லி ஜனகராஜ் நாசர் மீசை முருகேஷ் விகே ராமசாமி உள்ளிட்டோர் நடித்த படம் உன்னால் முடியும் தம்பி. இந்த படம் கடந்த 1988ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் எதையும் கே பாலசந்தர் இயக்கவில்லை என்று பத்திரிகையாளர் அந்தணன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதுகுறித்து பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப் பேச்சு அந்தணன் கூறியதாவது, கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் உன்னால் முடியும் தம்பி. இந்த படம் எடுத்துட்டு இருக்கும்போது இன்னொரு படத்தில் கமல் நடிச்சுக்கிட்டு இருந்தார். ஒரு தடவை படம் பிடிப்புக்கு கமல்ஹாசன் சரியா வரலைன்னு பாலச்சந்தர் உதவியாளர் அவர்கிட்ட கேட்டிருக்கிறார்.

அப்போது எப்படிப்பட்ட படத்துல நான் நடிச்சிட்டு இருக்கேன். சீரியல் மாதிரி ஒரு படம் எடுத்துட்டு நடிக்க கூப்பிடுறீங்க? அப்படீன்னு அவர்கிட்ட கமல் சொல்லிட்டார். உன்னால் முடியும் தம்பி படப்பிடிப்பு முடிந்ததும் கமல்ஹாசனுக்கு பெரிய மாலை வாங்கி போட்ட கே பாலச்சந்தர், இனிமேல் உன்னை வெச்சு படம் எடுக்க மாட்டேன்னு சொன்னார். அதுக்கு அப்புறம் கமல்ஹாசனை வெச்சு அவர் ஒரு படம் கூட எடுக்கவில்லை என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்