- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை… அவருக்கு பதிலாக நடிக்கப் போவது அந்த நடிகையா?...

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை… அவருக்கு பதிலாக நடிக்கப் போவது அந்த நடிகையா? – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் மாபெரும் வெற்றியை கடந்தாண்டில் பெற்றது. சமீபத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வெளியாகி அதுவும் நல்ல ஒரு வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. இந்த படமும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ஆக்சன் அதிரடி களத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அசத்தியிருந்தார்.

இதையடுத்து தற்போது பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் பிஸியாக நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படமும் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்டது. இந்த மாதம் இறுதியுடன் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. வரும் ஜனவரி 14ம் தேதி பராசக்தி படம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் டாண் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் அடுத்து நடிக்க உள்ளார். வரும் நவம்பரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கிறார்.

இதற்கிடையே சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முதலில் ஜோடியாக நடிக்க கமிட் செய்யப்பட்டவர் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான். இந்த படத்தின் கதாநாயகி அவர்தான் என்று முதலிலேயே முடிவான நிலையில் இப்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் அவர்களது பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் அவர்களுக்கு கோலாகலமாக திருமணமும் நடைபெற உள்ளது. திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதால் கால்ஷீட் இல்லாமல் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் இருந்து ராஷ்மிகாவே விலகி விட்டாரா, அல்லது அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால் படக்குழுவே அவரை நிராகரித்து விட்டதா என்பதற்கான சரியான பதில் தெரியவில்லை. எனினும் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கமிட் செய்யப்பட்டுள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. இவர் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயனுடன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்