- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் முழுக்க ஒலிக்க போகும் கெட்ட வார்த்தைகள்… இதுதான் உங்க சமுதாய அக்கறையா இயக்குனர் மாரி...

படம் முழுக்க ஒலிக்க போகும் கெட்ட வார்த்தைகள்… இதுதான் உங்க சமுதாய அக்கறையா இயக்குனர் மாரி செல்வராஜ்? – இது என்னப்பா வம்பா போச்சு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக பைசன் காளமாடன் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பைசன் படத்தில் நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் ரன்னிங் டைம் அதாவது திரையில் ஓடும் நேரம் மற்றும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பைசன் காளமாடன் படம் திரையில் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடும் என்று கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற அதிக நேரம், நீளமான படம் என்பது பல படங்களில் வெற்றிக்கு சவாலாகவே இருக்கிறது. ஏனெனில் படத்தின் நீளம் ரசிகர்களை வெகு எளிதாக சோர்வடையச் செய்யும்.

- Advertisement -

குறிப்பாக திரைக்கதை ஓட்டத்தில் சுவாரசியம் இல்லாமல் போனால் பெரிய சலிப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இதுவே படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான படங்கள் நேரத்தை குறைத்து இருந்தால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஏனெனில் படத்தின் நீளம் குறைக்கப்படும்போது பார்க்கும் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து என்ன என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் படத்தில் அதிகரிக்கும். அதே நேரத்தில் அரைமணி நேரத்துக்கு மேல் படத்தின் காட்சிகள் ஜவ்வாக இழுக்கும்போது ரசிகர்களை அதிருப்திடைகின்றனர்.

சமீபத்தில் தணிக்கைக்கு சென்ற பைசன் காளமாடன் படம் பார்த்த தணிக்கை குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் படம் முழுவதும் ஏராளமான இடங்களில் கெட்ட வார்த்தைகள் ஒலிக்கின்றன. படத்தின் கிராமிய சூழலை சித்தரிக்கும் விதமாக வட்டார வழக்கு என்ற பெயரில் இந்த கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தணிக்கையில் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மலேசியாவில் பைசன் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் இந்த வசனங்களால் தணிக்கை சான்றில் சிக்கல் வரலாம் என பயந்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படத்தை பார்க்க கூடாது என்று தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் அது கடுமையாக வசூலை பாதிக்கும் என்பதால் அவர் முன்னெச்சரிக்கையாக படத்தில் கெட்ட வார்த்தைகள் வரும் காட்சிகளை மியூட் செய்துவிட முடிவு செய்திருக்கிறார். அதனால் இந்த படத்தை 18 வயதுக்கு உடற்பட்டவர்களும் பார்க்கலாம் என்ற சூழல் மலேசியாவில் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இந்த கெட்ட வார்த்தை காட்சிகள் அப்படியே திரைக்கு வருமானால் திரையில் ஒலிக்க போகும் அந்த கெட்ட வார்த்தைகள் நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்களை குறிப்பாக பெண்களை நிச்சயமாக முகம் சுளிக்க வைக்கும். சிறிய வயதினர், மாணவர்கள் இந்த படத்தை பார்க்கும்போது அது போன்ற கெட்ட வார்த்தைகளை அவர்களும் எளிதாக பயன்படுத்த துவங்கி விடுவர். அதனால் இதுதானா உங்கள் சமூக அக்கறை மிஸ்டர் மாரி செல்வராஜ் என்று ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்