- Advertisement -
Homeபொழுதுபோக்குஆதிரை விஷயத்தில் இவ்வளவு கடுப்பு தேவையா? பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி ஸ்கூல் எதுவும் நடத்துக்கிறாரா?...

ஆதிரை விஷயத்தில் இவ்வளவு கடுப்பு தேவையா? பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி ஸ்கூல் எதுவும் நடத்துக்கிறாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 5ம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரத்தை இப்போது நிறைவு செய்திருக்கிறது. இதில் 10 ஆண்கள் 9 பெண்கள் 1 திருநங்கை என போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இதில் நந்தினி என்ற போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து இருக்க விருப்பமில்லை என 2 தினங்களுக்கு முன்பே அவராகவே வெளியேறி விட்டார்.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் வாட்டர்மெலன் திவாகர் வியானா ஆதிரை இயக்குனர் பிரவீன் காந்தி பிரவீன் ராஜ் கலையரசன் உள்ளிட்டோர் இருந்தனர். இதில் மிகவும் மோசமான நிலையில் குறைந்த வாக்குகளை வாங்கி பிரவீன் காந்தி மற்றும் கலையரசன் இருந்ததாகவும் அதில் குறைந்த வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 9 துவக்கத்தில் இருந்தே கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த முறை போட்டியாளர்கள் தேர்வில் விஜய் டிவி பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டதாக பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதிலும் வாட்டர் மெலன் திவாகர் கலையரசன் என பலரும் யூடியூப் சேனல் இன்ஸ்டாகிராம் பிரபலங்களாக மட்டுமே உள்ளனர்.

இதுவரை பிக்பாஸ் வீட்டுக்குள் சினிமா பிரபலங்கள் டிவி சீரியல் நடிகர்கள் நடிகைகள் மாடல் அழகிகள் என போட்டியாளர்கள் வந்த நிலையில் இந்த முறை அதிகம் பரிச்சயம் இல்லாத நபர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக களத்தில் இறக்கியிருப்பதாகவும் நிகழ்ச்சியில் பழைய சுவாரசியமே இல்லை என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்களை எல்லாம் தங்களது பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்னார். அப்போது ஆதிரை அமர்ந்தபடியே கையை உயர்த்தி ஆதிரை என்று சொன்னார். இதைப் பார்த்த விஜய் சேதுபதி கடுப்பாகி விட்டார்.

மற்றவர்கள் எழுந்து நின்று பெயரை சொல்லும்போது உங்களுக்கு மட்டும் என்ன பிரச்னை? மற்றவர்களின் வழக்கத்தை நீங்கள் ஏன் பிரேக் செய்கிறீர்கள்? உங்கள் விருப்பம்போல் நடந்துக்கொள்ள நீங்கள் இங்கு வரவில்லை. இது அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இல்லை என்றும் அவரை கண்டித்தார். அமர்ந்தபடி பதில் சொல்வது என்ன தவறு? இது என்ன ஸ்கூலா? பள்ளியில் கூட டீச்சர்ஸ் அட்வைஸ் செய்வதில்லை. இவர் இப்படி பேசுகிறாரே என விஜய் சேதுபதியை நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்