- Advertisement -
Homeபொழுதுபோக்குஆயிரம் பறவைகளுக்கு கனி கொடுத்த கலை ஆலமரத்தின் கிளை முறிந்ததே… - தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்...

ஆயிரம் பறவைகளுக்கு கனி கொடுத்த கலை ஆலமரத்தின் கிளை முறிந்ததே… – தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு குறித்து மனம் உருகிய கவிஞர் வைரமுத்து!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் இயக்குனர் ஏவிஎம் சரவணன். 86 வயதான நிலையில் மூப்பு காரணமாக இன்று அதிகாலை அவர் காலமானார். அவரது உடல் வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள், பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் ஏவிஎம். குறிப்பாக கடந்த 1980 90களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடித்த பல முக்கிய வெற்றிப் படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம்தான் என்பது கவனிக்கத்தக்கது. ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை முதல் சிவாஜி வரை 9 படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்த நிலையில் அந்த 9 படங்களுமே மாஸ் ஹிட் படங்களாக ரஜினிக்கு அமைந்தன.

- Advertisement -

அதே போல் கவிஞர் வைரமுத்து அதிகமான பாடல்களை எழுதியதும் ஏவிஎம் தயாரித்த படங்களுக்குதான். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவிற்கு அஞ்சலி தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது, மதிப்புக்குரிய ஏவிஎம் சரவணன் இயற்கை எய்திவிட்டார். இன்று என் அதிகாலையின் இருள் வடியவே இல்லை.

என்ன சொல்லி புலம்புவது? 44 ஆண்டு கால நட்பு காலமாகி விட்டது என்று கலங்குவேனா? ஏவிஎம்மின் அடையாளம் போய்விட்டதே என்று வருந்துவேனா? ஆயிரம் பறவைகளுக்கு கனி கொடுத்த கலை ஆலமரத்தின் கிளை முறிந்ததே என்று வாடுவேனா? திரை உலகில் என்னை தாங்கிப் பிடித்த ஒரு தங்கத் தூண் சாய்ந்து விட்டதே என்று கலங்குவேனா?

- Advertisement -

கலையுலகில் எங்களது சந்திப்பு மையம் வெறிச்சோடி விட்டதே என்று விசும்பு வேனா? நண்பர் சகோதரர் வழிகாட்டி இனி யாருண்டு என்று தவிப்பேனா? தமிழ் திரை உலகின் வரலாறு சொல்லும் ஆசிரியர் மறைந்து விட்டாரே என்று பதைப்பேனா? புரியவில்லை. எனது மகாக ரசிகர். ஏவிஎம் நிறுவனத்தில் அதிகமான பாடல் எழுதிய கவிஞர் என்று அருமையான பெருமையை எனக்களித்தவர்.

எல்லோராலும் மதிக்கப்பட்ட வெள்ளுடை ஆளுமை கையுடைந்து தவிக்கிறது இன்று கலையுலகம். அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் கலையுலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அவர் நினைவுகள் நீடு வாழும். என் ஆறாத் துயரம் ஆறுவதற்கு காலமே கை கொடு… என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து நெகிழ்ந்து போய் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்