- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல இசையமைப்பாளர் கேட்ட கேள்வி - ஒரு மணி நேரம் கேவி கேவி அழுத இயக்குனர்...

பிரபல இசையமைப்பாளர் கேட்ட கேள்வி – ஒரு மணி நேரம் கேவி கேவி அழுத இயக்குனர் மிஷ்கின்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி அஞ்சாதே சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் மிஷ்கின். வித்யாசமான கதைக்களத்தில் அவரது படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்பட்டன. க்ரைம் சார்ந்த அவரது படங்களுக்கு தமிழ் சினிமாவில் தனியாக ரசிகர் கூட்டமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக திரைபடங்களிலும் மிஷ்கின் நடித்து வருகிறார். குறிப்பாக சவரக்கத்தி படத்தில் மங்கா கேரக்டரில் அவரது வித்யாசமான நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மாவீரன் லியோ வணங்கான் டிராகன் உள்ளிட்ட பல படங்களில் மிஷ்கின் நடித்திருக்கிறார். எப்போதுமே நடிகராக மாறும் இயக்குனர்கள் திருத்தமான நேர்த்தியான நடிப்பை தருவார்கள். அதில் மிஷ்கினும் விதிவிலக்கு அல்ல.

- Advertisement -

குறிப்பாக நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியான டிராகன் படத்தில் கல்லூரி முதல்வர் கேரக்டரில் மிஷ்கின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதன் கேரக்டர் எந்தளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு மிஷ்கின் நடிப்பும் பெரிய அளவில் கவனமும் பாராட்டுகளையும் பெற்றது.

இயக்குனராக நடிகராக வலம் வரும் மிஷ்கின், இசையமைப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இசைஞானி இளையராஜா மீது அளவுக்கு அதிகமாக அன்பும் மரியாதையும் கொண்டவர் மிஷ்கின். இதை அவரே பலமுறை நேர்காணல்களில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். என் பெற்றோரை விட இளையராஜாவை அதிகமாக நேசிக்கிறேன் என்று மிஷ்கின் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மிஷ்கின் இளையராஜா குறித்து தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். அப்போது மிஷ்கின் கூறியதாவது, இளையராஜாவை நான் எப்போதும் அப்பா என்று தான் கூப்பிடுவேன். ஒரு நாள் ஒரு பாடல் பதிவின்போது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. நான் தொடர்ந்து அப்பா அப்பா அப்பா என்று கூறிக் கொண்டே அவரிடம் சண்டை போட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து அவர் கோபமாக என்னிடம் பேசினார். அப்போது, என்னை அப்பா என்று கூப்பிடாதே, நீ என்ன எனக்கா பொறந்தே? என்று திடீர் என்று என்னை பார்த்து கேட்டு விட்டார். அதைக் கேட்டு நான் அப்படியே உடைந்து போய்விட்டேன். அங்கேயே ஒரு மணி நேரம் நின்று கேவி கேவி அழுது கொண்டிருந்தேன். நான் மிகவும் மனம் வருந்தி உடைந்து அழுதது அன்றுதான் என்று மிஷ்கின் வருத்தமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்