தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். அவர் நாயகியாக நடித்த பைரவா சர்க்கார் நடிகையர் திலகம் ரஜினி முருகன் ரெமோ தொடரி தானா சேர்ந்த கூட்டம் அண்ணாத்த சாமி 2 சைரன் 108 என பல படங்களில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றது.
கடந்தாண்டில் தனது நீண்ட கால நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொண்டார். பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் கோவாவில் விமரிசையாக நடந்தது. நடிகர் விஜய் நடிகை திரிஷா இருவரும் தனி விமானத்தில் கோவா சென்று இந்த திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியது அப்போது இணையத்தில் வைரலானது.
திருமணத்துக்கு பிறகும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். இளமையும் நடிப்பாற்றலும் மிக்க கீர்த்தி சுரேஷ், திருமணத்துக்கு முன்பு நடிகையர் திலகம் என்ற படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி தேவி கேரக்டரில் மிகவும் அழுத்தமான நடிப்பை தந்திருந்தார். இந்த கேரக்டரில் நடித்த அவருக்கு மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்கு பிறகும் நடிகை கீர்த்தி சுரஷே் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் அவர் நடிப்பில் உருவான ரிவால்வர் ரீட்டா படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. 2 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த படம் சில காரணங்களால் திரைக்கு வராமல் முடங்கி கிடந்த நிலையில் சமீபத்தில்தான் திரைக்கு வந்தது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் சுதன் தயாரித்திருந்தார்.
ரிவால்வர் ரீட்டா படம் பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைக்கவில்லை. இந்த படம் மொத்தம் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில் படம் ரிலீஸ் செய்த ஊர்களில் எல்லாம் ஓரிரு நாட்களிலேயே ரசிகர்களின் கூட்டமின்றி காற்று வாங்கியுள்ளது.
இந்த சூழலில் ரிவால்வர் ரீட்டா படம் முதல் வாரத்தில் மொத்தமே 4 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பெரிய அளவில் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாட்டில் இந்த படம் தியேட்டர் ஷேர் ஆக ரூ. 30 லட்சம் கூட தாண்டவில்லை என்ற லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் பிரமோசனுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள் எல்லாம் கீர்த்தி சுரேஷ் சென்ற நிலையில் படம் வரவேற்பின்றி ஏமாற்றத்தை தந்துள்ளது.





