- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்(டு)ம் நடிப்பில் களமிறங்கும் கண்ணழகி... புதிய மலையாள படம் - இன்ஸ்டாவில் அட்லீக்கு வாழ்த்து... அப்டேட்டை...

மீண்(டு)ம் நடிப்பில் களமிறங்கும் கண்ணழகி… புதிய மலையாள படம் – இன்ஸ்டாவில் அட்லீக்கு வாழ்த்து… அப்டேட்டை கொடுத்த மீனா

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகைகளில் ஒருவர் மீனா. சிறு வயதிலேயே மீனா, சிவாஜி கணேசனின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்தார். இதில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியுடன் அவர் நடித்த காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இப்படி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த மீனா தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ராஜ்கிரண் உடன் அவர் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் மீனாவுக்கு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது. பின்னர் தெலுங்கு, மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக ஒரு ரவுண்ட் அடித்ததோடு ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு, அர்ஜூன், பார்த்திபன், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்தார். பல படங்களில் கண்களால் கொஞ்சிப் பேசும் மீனாவை ரசிர்கள் செல்லமாக கண்ணழகி என்றும் அழைப்பதுண்டு.

- Advertisement -

திருமணத்திற்கு பின் நடிப்பை தொடர்ந்தாலும், வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே மீனா நடித்துவந்தார். இதற்கிடையே டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். திருமணத்திற்குப் பின் மலையாளத்தில் அவர் நடித்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் பரவலாக பேசப்பட்டது. 2014ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக நடித்திருந்தார்.

தொடர்ந்து 2020-ல் ஓடிடியில் வெளியான த்ரிஷ்யம் இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது. கடைசியாக அவர் கடந்தாண்டு தமிழில் அண்ணாத்த படத்திலும், மலையாளத்தில் ப்ரே டாடி படத்திலும் நடித்திருந்தார். இப்படி சென்றிருந்த மீனாவின் வாழ்வில் கடந்தாண்டு சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போது முதல் சோகத்தில் ஆழ்த்திருந்த மீனா, தற்போது அதிலிருந்து மீண்டு நடிப்புக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்.

- Advertisement -

அவர் தனது இன்ஸ்டா பதிவில், ‘மீண்டும் லைட்ஸ், கேமிரா முன்பு நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. மறக்க முடியாத மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கத் தயார். நான் மிகுந்த உற்சாகத்தில் உள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார். இந்தப் ‘அபோட்’ மலையாள படத்தை இயக்கிய ஜெய ஜோஸ் ராஜ் இயக்குகிறார்.

மற்றொரு பதிவில் மீனா, ‘ஜவான் படம்’ வெளியாவதை முன்னிட்டு இயக்குநர் அட்லீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், அட்லீ உங்கள் படம் இதயங்களைக் கவர்ந்து, சினிமாவில் புதிய வரலாறு படைப்பதை பார்க்க ஆவலாக உள்ளேன் என தெரிவித்திருந்தார். மீனாவின் மகள் நைனிகா அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்