- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது 2வது மனைவி சமந்தாவுக்கு பிரமாண்ட பரிசளித்த கணவர் ராஜ் நெடிமூர் - ஆனா இதுல...

தனது 2வது மனைவி சமந்தாவுக்கு பிரமாண்ட பரிசளித்த கணவர் ராஜ் நெடிமூர் – ஆனா இதுல வில்லங்கமான ஒரு சஸ்பென்ஸ்சும் இருக்குதே…

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வந்தவர் சமந்தா. தமிழில் கத்தி தெறி தங்கமகன் 10 எண்றதுக்குள்ள மெர்சல் அஞ்சான் இரும்புத்திரை யு டர்ன் சீமராஜா காத்துவாக்குல ரெண்டு காதல் யசோதா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டில் நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்த நிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிக்க விரும்பியதால் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. அதனால் இருவரும் பிரிந்த நிலையில் 2021ம் ஆண்டில் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.

- Advertisement -

அதன்பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை கடந்தாண்டில் நாக சைதன்யா 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் முரட்டு சிங்கிளாக வலம் வந்த நடிகை சமந்தா அடிக்கடி கிசுகிசு வில் மட்டும் பரபரப்பாக பேசப்பட்டார். அப்போது சிட்டாடல் என்ற இந்தி வெப்சீரியலில் நடித்த போது அதன் இயக்குனர் ராஜ் நெடிமூருடன் அதிகளவில் இணைத்து பேசப்பட்டார்.

இந்த சூழலில் நடிகை சமந்தா, சமீபத்தில் டைரக்டர் ராஜ் நெடிமூரை முறைப்படி 2வது திருமணம் செய்து கொண்டார். ராஜ் நெடிமூரும் ஏற்கனவே திருமணமாகி தனது மனைவியை பிரிந்தவர்தான். கடந்த 1ம் தேதி கோவையில் உள்ள ஈஷா மையத்தில் லிங்கபைரவி கோயிலில் இவர்களது திருமணம் மிக எளிமையான முறையில் நடந்தது.

- Advertisement -

திருமணம் முடிந்த பிறகு தனது அன்பு மனைவி சமந்தாவுக்கு ராஜ் நெடிமூர் விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்றை பரிசளித்திருக்கிறார். மேலும் மும்பையில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 65 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொகுசு பங்களாவை ராஜ் நெடிமூர், அன்பு மனைவி சமந்தாவுக்கு பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார்.

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் அந்த ஏரியாவில் தனது 2வது மனைவி சோபிதா துலிபாலாவுடன் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது திட்டமிட்டே நடந்ததா, அல்லது யதேச்சையாக நடந்ததா எனத் தெரியவில்லை. எனினும் முன்னாள் கணவர் உள்ள ஏரியாவிலேயே தனது 2வது கணவர் ராஜ் நெடிமூர் பிரமாண்ட பங்களா பரிசளித்திருப்பதால் சமந்தா சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய்விட்டதாக இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்